1. Home
  2. வர்த்தகம்

ஸ்மார்ட்போன் இம்சைகளுக்கு டாடா.. ‘நான்டிராய்ட்’வந்தாச்சு!

ஸ்மார்ட்போன் இம்சைகளுக்கு டாடா.. ‘நான்டிராய்ட்’வந்தாச்சு!

ஸ்மார்ட்போன் இல்லாத கைகளே இன்று இல்லை, முன்பு செங்கல் போன்ற மொபைல் போன் வைத்திருந்தாலே பெரிய பணக்காரர் என பேசிய இந்த உலகம், இன்று ஸ்மார்ட் போன் கூட இல்லையா என இழிவாக நினைக்கும் சூழல் உருவாகியுள்ளது. தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்துவரும் நேரத்தில் தற்போது ட்ராய்ட் என்ற போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ட்ராய்ட் போனின் பெயர் தான் ‘நான்டிராய்ட்’... ஆண்டிராய்டு ஆட்டிப்படைத்துவரும் யுகத்தில் அது என்ன ‘நான்டிராய்ட்’? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். எப்பவுமே ஓல்டு இஸ் கோல்டு தான் என்ன தான் ஆண்டிராய்டு, ஐஓஎஸ் என ஸ்மார்ட் உலகில் மிதந்தாலும் நம்ம பழைய செங்கல் கல் போனுக்கு மவுசு அதிகம். மறுபடியும் அதை பயன்படுத்தமாட்டோமா? என யோசிப்பவரும் அதிகம். வாட்ஸ் அப் இல்லை, ஃபேஸ்புக் இல்லை, ஆன்லைன் இல்லை, ஆஃப் லைன் இல்லை மொத்தத்தில் எந்த தொல்லைகளும் இல்லை.

வாட்ஸ் அப் மெசெஜை அனுப்பிவிட்டு அதை படித்தார்களா? இல்லையா? அய்யயோ நம்ம பார்த்துட்டோம்னு தெரிஞ்சிருக்கும் ரிப்ளை அனுப்பலானா? தப்பாயுடும் என்ற பதட்டம் இனி நான்டிராய்ட் மூலம் குறைந்துவிடும். அதைவிட பெரிய கொடுமையான வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலிருந்து பெரிய விடுதலை.. 24 மணி நேரத்திற்கு ஒன்னு வச்சே ஆகனும் என்ற கண்டிஷனும் இல்லை! அப்பறம் அந்த எமோஜ்... எல்லாவற்றிற்கும் கூடவே மொக்கை எமோஜை வேற ஃபார்வேர்ட் பண்ணி கடுப்பேத்துறது. ட்விட்டர், யூடியூப், ஹாட்ஸ்டார், டப்ஸ் மேஷ் என ஆண்டிராய்டு சேட்டைகளை இன்னும் அடிக்கிக்கொண்டே போகலாம் .

செல்போன் என்பது அதனுடைய வேலையை மட்டும் செய்யக்கூடிய நான்டிராய்ட் போன்கள் மீண்டும் வர்த்தக சந்தையில் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர். கால் மட்டும் பேசலாம், பேச முடியாத நேரங்களில் ஒரு குறுஞ்செய்தி அத்துடன் முடிகிறது. போனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு. நோக்கியா 1100, சம்சாங் குரு ஆகிய செங்கல் டப்பா போன்கள் மீண்டும் ரீஃபர்னிஷ்டு வெர்ஷன் விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் பழைய நினைவுகளுக்கு திரும்புவோம்!

newstm.in

Trending News

Latest News

You May Like