1. Home
  2. வர்த்தகம்

ஆச்சரியம் ஆனால் உண்மை! இந்தியாவில் 25% இளைஞர்களே இணையத்தை பயன்படுத்துகின்றன

ஆச்சரியம் ஆனால் உண்மை! இந்தியாவில் 25% இளைஞர்களே இணையத்தை பயன்படுத்துகின்றன

இந்தியாவில் 25% இளைஞர்களே இணையத்தை பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் பிஈடபிள்யூ ஆராய்ச்சி மையம் 2017 ஆம் ஆண்டில் இளைஞர்களிடம் இணைய பயன்பாடு எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்ற ஆய்வை மேற்கொண்டது. ஆய்வின் முடிவில், இந்திய இளைஞர்களி 4இல் ஒருவர்தான் இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை கொடுத்தாலும் இதுதான் உண்மை என்கிறது பிஈடபிள்யூ.

இன்றைய இளைஞர்களில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே யாரும் இல்லை. அதிலும் பொதுவாக ஸ்மார்ட்போனில் வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூ டியூப் இதையே அதிகம் பயன்படுத்துவதுண்டு. இவை அனைத்திற்கு இணையம் தேவை. ஆனால் பிஈடபிள்யூ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இளைஞர்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2012ல் 12% இளைஞர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தினர் தற்போது 22% ஆக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் வட அமெரிக்க இளைஞர்கள் முதலிடமும், ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் இரண்டாவது இடமும் பெற்றுள்ளனர். மேலும் சமூக வலைதளமான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவோர் அமெரிக்கர்களே என்பதும் தெரியவந்துள்ளது. மாறாக இந்தியாவில் 2012ல் 8% பேர் சமூக ஊடகங்கள் மீது ஆர்வமாக இருந்ததும், தற்போது 20% ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்களில் 78% இளைஞர்கள் பேஸ்புக் என்றால் என்ன என்று தெரியாமலும், 80% இளசுகள் ட்விட்டர் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமலும் பின் தங்கிய நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கேட்பதற்கு நம்ப முடியாதவையாக இருந்தாலும் இதுதான் உண்மை என அழுத்தி சொல்கிறது ‘ஆய்வு’

newstm.in

Trending News

Latest News

You May Like