சாம்சங்கின் எம் சிரீசில் அடுத்த மொபைல் அறிமுகம்

சாங்சங் நிறுவனத்தின் கேலக்சி எம் சிரீசில் மொபைல்களில் மூன்றாவது எம் 30 இந்தியாவில் நேற்று அறிமுகமானது. இதற்கு முன் இந்த மாடலில் கேலக்சி எம்20 மற்றும கேலக்சி எம் 10 மொபைல்கள் அறிமுகமாகி இருந்தன.
 | 

தற்போது அறிமுகமாகி இருக்கும் எம் 30 மொபைல் போன்கள் 6.38 இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே கொண்டது. மேலும் 5,000mAh பேட்டரியும், 15W வேகத்தில் சார்ஜிங் சப்போர்டும் கொண்டது. 

இந்த மொபைல் போன்கள் ஆண்ராய்டு 9 பை ஆப்ரேடிங் சிஸ்டத்தில் செயல்பட கூடயவை. 4 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட கேலக்சி எம் 30 போன்கள் ரூ.14, 990க்கும், 6 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட எம் 30 போன்கள் ரூ.17, 990க்கும் விற்பனைக்கு வர உள்ளன. 

இதற்கு முன் வெளியான எம் 20 போன்கள் ரூ. 10,990க்கும் 12,990க்கும் மெமரி பொறுத்து தற்போது விற்பனையாகின்றன. மேலும் எம் 10 செல்போன்கள் ரூ. 7990க்கும் 8,990க்கும் விற்பனையாகின்றன. 

அறிமுகமாகி உள்ள எம்30 போன்கள் டிரிப்பிள் கேமரா கொண்டவை. அவை முறையே 13, 5 மற்றும் 5 மெகா பிக்சல்கள் மற்றும் வெவ்வேறு திறன்கள் கொண்டவை. மேலும் பிரெண்ட் கேமரா 16 மெகா பிக்சல் கேமரா கொண்டவை. இந்த போன்கள் கருப்பு மற்றும் நீல நிறத்தில் விற்பனை வரயிருக்கின்றன. 

இந்த போன்களின் விற்பனை வரவிருக்கும் மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்குகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP