சாம்சங்கின் கேலக்சி S10E லீக்கானது!

சாம்சங் நிறுவனம் தனது அடுத்த நவீன படைப்பான கேலக்சி S10 மொபைலை வெளியிட தயாராகி வரும் நிலையில், அதேபோல குறைந்த விலையில் வெளியாகவுள்ள S10E என்ற மொபைலை பற்றிய விவரங்கள் லீக் ஆகியுள்ளது.
 | 

சாம்சங்கின் கேலக்சி S10E லீக்கானது!

சாம்சங் நிறுவனம் தனது அடுத்த நவீன படைப்பான கேலக்சி S10 மொபைலை வெளியிட தயாராகி வரும் நிலையில், அதேபோல குறைந்த விலையில் வெளியாகவுள்ள S10E என்ற மொபைலை பற்றிய விவரங்கள் லீக் ஆகியுள்ளது.

கடந்த வருடத்தில் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் S9 மற்றும் S9 Plus ஸ்மார்ட்போன்கள் மூலம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது சாம்சங் நிறுவனம். அதிநவீன கேமரா மற்றும் டிஸ்பிளே கொண்டிருந்ததால், 2 மொபைல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தனது அடுத்த படைப்பான S10 மொபைலை, நான்கு மாடல்களில் வெளியிட சாம்சங் தயாராகி வருகிறது. S 10, S10 Plus, S10E, S10 5G ஆகிய நான்கு மாடல்களில் இந்த மொபைலை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் S10E என்பது குறைந்த விலை மொபைலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. S10 வாங்க இயலாதவர்கள், S10E-ஐ கருதுவார்கள் என்ற நம்பிக்கையில் சாம்சங் அதை வடிவமைத்தது. இந்த மொபைலின் படங்கள் தற்போது லீக்காகியுள்ளன. இதை வைத்து பார்க்கும்போது, இந்த மொபைலில் S10 போலவே, டிஸ்ப்ளே ஓரத்தில் சிறிய ஓட்டை போன்ற கேமரா இருக்கும் என தெரிகிறது. 

இதில் விரல் ரேகை பதிவு செய்யும் சென்சார்கள் பின் பக்கமோ அல்லது டிஸ்ப்ளேவில்ன் அடியிலோ வைக்கப்படாமல், பக்கவாட்டில் வைக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. மொபைலின் ரேம், ப்ராசசர் போன்ற மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால் இந்த மொபைல் சமீபத்தில் வெளியான ஐபோன் XR எனப்படும் குறைந்த விலை மொபைலுக்கு நேரடி போட்டியாக வெளியாகிறது. இதன் விலை தற்போது 849 டாலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது. ஐபோனை XR-ஐ விட இது 100 டாலர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP