1. Home
  2. வர்த்தகம்

மடியும் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் 'S10 Fold' வந்தாச்சு!

மடியும் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் 'S10 Fold' வந்தாச்சு!

சாம்சங் நிறுவனம் தனது புதிய 'அன்பேக்ட் 2019' நிகழ்ச்சியில், கேலக்சி S10, S10+, S10 5G, S10 Fold ஆகிய நான்கு மொபைல்களை அறிமுகப்படுத்தியது. இதில், மடியும் டிஸ்ப்ளே கொண்ட மொபைல் வாடிக்கையாளரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நீண்ட நாட்களாக சாம்சங் நிறுவனம் மடியும் டிஸ்ப்ளே கொண்ட மொபைலை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்து வந்த நிலையில், நேற்று நடைபெற்ற சாம்சங் அன்பேக்ட் 2019 விழாவில், அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் வாட்ச் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

கேலக்சி S10, S10+, S10 5G, S10 Fold ஆகிய நான்கு அதிநவீன கேலக்ஸி S10 ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது, சாம்சங்கின் புதிய Fold மொபைல் மாடல் தான். மடியும் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த மொபைல், சாதாரணமாக 4.6 இன்ச் டிஸ்ப்ளேவை தான் கொண்டிருக்கும். ஆனால், அதைத் திறக்கும்போது, உள்ளே 7.3 இன்ச்சில் டேப்லெட் போன்ற பெரிய டிஸ்ப்ளேவை பயன்படுத்தலாம். இதில் 3 ஆப்களை ஒரே நேரத்தில், பயன்படுத்தும் நவீன மல்டிடாஸ்கிங் தொழில்நுட்பம் உள்ளது. 7nm ப்ராசசர், 12ஜிபி ரேம், 512ஜிபி உள்மெமரி, ஃபிளாஷ் 3.0, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான வசதிகள் உள்ளன. 2 பேட்டரிகளை கொண்டுள்ள இந்த மொபைல், 4380mAh பேட்டரி திறனை வெளிப்படுத்துகிறது. இதன் விலை, சுமார் ரூ.1.5 லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளதாம்.

S10ல் 6.1 இன்ச் டிஸ்பிளே மற்றும் 8 ஜிபி ரேம், S10+-ல் 6.4 இன்ச் டிஸ்பிளே மற்றும் 8 அல்லது 12 ஜிபி ரேம், S10e-ல் 5.8 இன்ச் டிஸ்பிளே மற்றும் 6 அல்லது 8ஜிபி ரேம் உள்ளன. குறைந்த பட்சமாக S10e-ன் விலை சுமார் ரூ.55,000 இருக்கும் என்றும், S10+ன் விலை ரூ.71,000 இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மொபைல்கள் போக, 'கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ்', 'கேலக்ஸி ஃபிட்', 'கேலக்ஸி ஃபிட் e' என்ற மூன்று வாட்ச்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் என்பது, சாம்சங்கின் நவீன ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இது ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, தூக்கம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் திறன் கொண்டுள்ளது. இதேபோல 'ஃபிட்', 'ஃபிட் e' என இரண்டு ஆக்டிவிட்டி ட்ராக்கர் வாட்ச்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஆப்பிளின் 'ஏர் பாட்ஸுக்கு' போட்டியாக, 'கேலக்சி பட்ஸ்' என்ற பெயரில் வயர்லெஸ் ஹெட்போனையும் சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like