5 கேமராவுடன் கலக்கும் 'நோக்கியா 9' Pureview

நோக்கியா நிறுவனம், ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில், ஐந்து 12 மெகாபிக்சல் கேமராக்கள் கொண்ட தனது புதிய ஃபிளாக்ஷிப் மொபைலான நோக்கியா 9 Pureview-ஐ, அறிமுகப்படுத்தியது.
 | 

பிரபல 'கார்ல் ஜைஸ்' கேமரா தொழில்நுட்பமும் இதில் உள்ளது. ஆண்ட்ராய்டு '9.0 பய்' இயங்குதளத்துடன் இந்த மொபைல் வாடிக்கையாளர்களின் கைகளில் கிடைக்கும். மேலும் சிறப்பம்சமாக, இதில் ஸ்னாப்டிராகன் 845, 5.99 இன்ச் QHD display, 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள் மெமரி, பாஸ்ட் சார்ஜிங், ஜி வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங், 3320 mAh பேட்டரி ஆகியவை உள்ளன. முன்பக்கம் 20 மெகாபிக்ஸல் கேமரா உள்ளது.

இதற்கு முன், நோக்கியா நிறுவனம் 'Pureview' என்ற பெயரை, தனது அதிநவீன கேமராக்கள் கொண்ட 808, Lumia 1020 ஆகிய மொபைல்களுக்கு மட்டுமே வழங்கி வந்தது. இதனால் இந்த மொபைலின் கேமரா அவற்றைபோல மிகவும் சிறப்பாக இருக்கும், என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடையே அதிகரித்துள்ளது. சாம்சங், ஆப்பிள் மற்றும் ஹுவெய் நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் மொபைல்களின் விலை 1 லட்ச ரூபாயை கடந்து சென்ற நிலையில், நோக்கியா 9, சுமார் ரூ.50,000-க்கு வெளியாகும் என கூறப்படுகிறது.  

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP