இன்று அறிமுகமாகிறது 'ஒன்ப்ளஸ் 6'!

மொபைல் ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஒன்ப்ளஸ் 6' ஸ்மார்ட்போன், லண்டனில் இன்று இரவு அறிமுகப்படுத்தப்படுகிறது.
 | 

இன்று அறிமுகமாகிறது 'ஒன்ப்ளஸ் 6'!

இன்று அறிமுகமாகிறது 'ஒன்ப்ளஸ் 6'!

மொபைல் ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஒன்ப்ளஸ் 6' ஸ்மார்ட்போன், லண்டனில் இன்று இரவு அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஐபோன், பிக்சல் போன்ற மொபைல்களுடன் போட்டி போடும் அளவுக்கு நவீன யுக்திகளை, அவற்றின் பாதி விலைக்கே வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது ஒன்ப்ளஸ் நிறுவனம். கடைசியாக அந்நிறுவனம் வெளியிட்ட 'ஒன்ப்ளஸ் 5' மிகப்பெரிய ஹிட்டானது.

இன்று புதிதாக வெளியாகவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 பற்றி நமக்கு தெரிந்த விவரங்களிளை பார்க்கலாம்..

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தலைவர், புதிய போன் பற்றி சில வாரங்களுக்கு முன் ஒரு ட்வீட் செய்தார். அதில் 'நாட்ச்' எனப்படும் டிசைனில் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஐபோன் எக்ஸில் காணப்படும் நாட்ச் டிஸ்பிளேவில், போனின் ஸ்பீக்கர் இருக்கும் இடத்தை தவிர மற்ற இடங்களில் டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கும். 

இன்று அறிமுகமாகிறது 'ஒன்ப்ளஸ் 6'!

இதை கேட்ட ஒன்ப்ளஸ் ரசிகர்கள் அவரை உண்டு இல்லையென செய்துவிட்டனர். ஐபோனின் இந்த மாடல் பல தரப்பில் கடும் விமர்சனத்துக்குள்ளாகிய நிலையில், அதை பின்பற்றிய ஒன்ப்ளஸ் மீது தங்கள் கோபத்தை நெட்டிசன்கள் காட்டினார்கள். இதைத் தொடர்ந்து, டிஸ்பிளேவின் மேல் பாகம் வாடிக்கையளர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை மறைத்துக்கொள்ள ஒரு புதிய சாப்ட்வேர் இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த போனில் 6-8ஜிபி ரேம் வழங்கப்படும். 256 ஜிபி வரை மெமரி, 20+16 மெகாபிக்சல் பின் கேமரா, 16 மெகாபைசல் முன் கேமரா போன்றவை உண்டு. 

இதன் விலை, 37,000 முதல் 40,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட பின், நாளை மும்பையில் அறிமுக விழா நடைபெறுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP