1. Home
  2. வர்த்தகம்

ஈரான் இல்லாவிட்டாலும் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாது: இந்தியன் ஆயில்

ஈரான் இல்லாவிட்டாலும் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாது: இந்தியன் ஆயில்

ஈரானிடம் இருந்து இந்திய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ஈரான் எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டால் கூட, தங்களிடம் வேறு பல திட்டங்கள் உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயற்சி செய்து வருகிறார். அணு ஆயுத தயாரிப்பை தடுக்க ஈரானுடன் அமெரிக்கா போட்ட ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்தார். அதன் பிறகு, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இந்தியாவுக்கும் இதேபோல ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில், ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ளும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஈரானிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் பெறும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுமா என கேட்கப்பட்டது. அதற்கு அந்நிறுவனத்தின் சஞ்சீவ் சிங், தங்களிடம் பல்வேறு மாற்று திட்டங்கள் உள்ளதாக தெரிவித்தார். "ஈரானிடம் இருந்து வாங்கப்படும் எண்ணெய் நிறுத்தப்பட்டால் கூட அதே அளவை சவுதியிடம் இருந்து பெற முடியும். கச்சா எண்ணெய் சந்தை மிக பெரியது. நம்மால் பெற முடியாதது என எதுவுமே இல்லை" என்றார் சிங்.

அமெரிக்காவின் எச்சரிக்கைகளை தொடர்ந்து, பல ஆசிய நாடுகள், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த திட்டமிட்டு வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like