48 மெகாபிக்சல் கேமரா கொண்ட 'ரெட்மி நோட் 7' அறிமுகம்!

பிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமியில் இருந்து பிரிந்த ரெட்மி நிறுவனம், 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட 'நோட் 7' என்ற நவீன ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
 | 

48 மெகாபிக்சல் கேமரா கொண்ட 'ரெட்மி நோட் 7' அறிமுகம்!

பிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமியில் இருந்து பிரிந்த ரெட்மி நிறுவனம், 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட 'நோட் 7' என்ற நவீன ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜியோமி நிறுவனம் ரெட்மி போன்கள் மூலமாக தனக்கென ஒரு மார்க்கெட்டை உலகம் முழுவதும் உருவாக்கியது. அதில் முக்கியமாக, இந்தியாவில், ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பல நவீன சேவைகளை குறைந்த விலைக்கு வழங்குவதால் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த நிறுவனத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், ஜியோமி நிறுவனம், ரெட்மியை தனி நிறுவனமான பிரிக்க முடிவு செய்தது. அதன்படி ரெட்மி தனி நிறுவனமாக பிரிந்து, தனது முதல் ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 7-ஐ சீனாவில் வெளியிட்டுள்ளது. 

ரெட்மி நோட்  7 ஸ்மார்ட்போனில், அதிநவீன 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்ஸல் கொண்ட இரட்டை பின்பக்க கேமரா உள்ளது. முன்பக்கம், 13 மெகா பிக்ஸல் கொண்ட செல்ஃபி கேமராவும் உள்ளது. இந்த மொபைலில் 4000 mAh பேட்டரியும், அதிவேக சார்ஜிங் வசதியும் உள்ளது.

6.3 இன்ச் டிஸ்ப்ளே, 2.2 GHz ஸ்நாப்டிராகன் 660- 8 கோர் பிராசஸர்;  3 ஜிபி, 4 ஜிபி 6 ஜிபி என மூன்று வகைகளிலும், 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இரண்டு வகை உள் மெமரி வகைகளிலும் இந்த மொபைல் வெளியாகிறது. கூடுதலாக மெமரி கார்டு சேர்த்துக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இந்திய விலைப்படி, 10,300 ரூபாய்க்கு சீனாவில் அறிமுகமாகியுள்ளது. ஜனவரி 15-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவுக்கு எப்போது இந்த மொபைல் கொண்டு வரப்படும் என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP