சாம்சங்குக்கு போட்டியாக ஹுவேய்யின் 'மடியும்' மொபைல் MATE X

சாம்சங் கேலக்சி S10 Fold மொபைலுக்கு போட்டியாக ஹுவெய் நிறுவனம், 'மேட் X 5G' மொபைலை அறிமுகம் செய்துள்ளது. மடிக்கக்கூடிய இந்த மொபைல், விரியும் போது 8 இன்ச் டேப்லெட் டிஸ்பிளேவை வழங்குகிறது.
 | 

சாம்சங்குக்கு போட்டியாக ஹுவேய்யின் 'மடியும்' மொபைல்  MATE X

சாம்சங் கேலக்சி S10 Fold மொபைலுக்கு போட்டியாக ஹுவேய் நிறுவனம், 'மேட் X 5G' மொபைலை அறிமுகம் செய்துள்ளது. மடிக்கக்கூடிய இந்த மொபைல், விரியும் போது 8 இன்ச் டேப்லெட் டிஸ்பிளேவை வழங்குகிறது.

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்சி S10 Fold என மொபைலை அறிமுகப்படுத்தியது. இந்த Fold மொபைல், மடிந்திருக்கும் போது,  4.6 இன்ச் டிஸ்பிளேவையும், விரியும் போது 7.3 இன்ச் டிஸ்பிளேவையும் வழங்குகிறது. இந்த மொபைலின் விலை சுமார் 1.4 லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்பட்டது. 

இந்த நிலையில் அந்த மொபைலுக்கு நேரடி போட்டியாக ஹுவேய் நிறுவனம் புதிய மடியும் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. மேட் X என அழைக்கப்படும் இந்த மொபைல், சாம்சங் போல அல்லாமல், முன்பக்கமும் பின்பக்கமும் 6.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதை விரிக்கும்போது, இரண்டும் சேர்ந்து 8 இன்ச் டேப்லட் டிஸ்பிளேவை வழங்குகிறது. விரியும்போது, இந்த மொபைல் வெறும் 5.4 mm, என மிக மெல்லிசாக காட்சியளிக்கிறது. 5ஜி சேவை கொண்ட இந்த மொபைலில், கிரின் 980 ப்ராசசர், 8 ஜிபி ரேம், 512 ஜிபி உள் மெமரி ஆகிய அம்சங்கள் உள்ளன. 4500 mAh இரட்டை பேட்டரி கொண்டுள்ள மேட் X, அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதால், வெறும் 30 நிமிடங்களில் 85% சார்ஜ் ஏறிவிடுமாம். 

இதன் விலை, 2299 யூரோ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்புப்படி, இது சுமார் 1.85 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP