வந்தாச்சு கூகுளின் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL!

கூகுள் நிறுவனத்தின் பிரபல பிக்சல் வரிசையில் அடுத்த ஸ்மார்ட் போன் வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஆகிய இரண்டு மொபைல்களும், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று வெளியிடப்பட்டுள்ளன.
 | 

பிக்சல் மொபைல் மூலம் ஆப்பிள் ஐ-போன்களுக்கு நேரடி போட்டியை கொடுத்தது கூகுள். உலகிலேயே அதிகம் மக்கள் பயன்படுத்தும் ஆண்டிராய்டு ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் சிறந்த போன்கள் என பிக்சல் பெயரெடுத்தது குறிப்பிடத்தக்கது. பிக்சல் மற்றும் பிக்சல் 2 மொபைல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தனது அடுத்த நவீன மொபைலை கூகுள் இன்று அறிமுகப்படுத்தியது. 

கூகுள் பிக்சல் 3 மொபைலின் பின்னால் 12.2 பிக்சல் இரட்டை கேமரா உள்ளது. அதேபோல, முன்பக்கம், இரண்டு 8 மெகாபிக்ஸல் செலஃபி கேமரா உள்ளது. 4 ஜிபி ரேம் மட்டுமே கொண்டுள்ள இந்த பிக்சலில், 2.5 GHz ஆக்டகோர் ப்ராசசர் உள்ளது. மற்ற அனைத்திலும் 3 மற்றும் 3 XL ஏறத்தாழ ஒரே வசதிகளை தான் கொண்டுள்ளது. 5.8 இன்ச் அளவு இருக்கும் பிக்சல் 3ல், 1080 x 2160 டிஸ்பிளே உள்ளது. 6.3 இன்ச் அளவு இருக்கும் 3 XLல் 1440 x 2960 டிஸ்பிளேவும் உள்ளது.

இந்தியாவில், 64 ஜிபி பிக்சல் 3ன் விலை ரூ.71,000 என்றும், 128 ஜிபி பிக்சலின் விலை ரூ.80,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 64 ஜிபி பிக்சல் 3ன் விலை ரூ.84,000 என்றும், 3 XLன் விலை ரூ.92,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP