1. Home
  2. வர்த்தகம்

தமிழ் உள்ளிட்ட 14 மொழிகளில் கூகுள் அசிஸ்டண்ட்!

தமிழ் உள்ளிட்ட 14 மொழிகளில் கூகுள் அசிஸ்டண்ட்!

ஆண்ட்ராய்டு மொபைல்கள் மற்றும் கூகுள் ஹோம் போன்ற குரலால் இயங்கும் கருவிகளில் வழங்கப்பட்டு வரும் கூகுள் அசிஸ்டண்ட் சேவை தற்போது தமிழ் உள்ளிட்ட 14 மொழிகளில் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபோனின் 'சிறி', அமேசானின் 'அலெக்ஸா' போன்ற வாய்ஸ் அசிஸ்டன்ட் தொழில்நுட்பங்களை தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு கூகுள் அசிஸ்டன்ட் என பெயரிடப்பட்ட தனது செயலியை கூகுள் அறிமுகப்படுத்தியது. இந்த சேவை மூலம் நமது குரலை வைத்தே மொபைல் போனை இயக்க முடியும். தகவல்களை தேடுவது, பாடல்களை ஒலிப்பது, கால் செய்வது, உட்பட பல்வேறு விஷயங்களை நமது குரல் மூலமே புரிந்து கொண்டு செயல்படுகிறது இந்த ஆப்.

முதலில் ஆங்கிலத்தில் துவக்கப்பட்ட இந்த சேவையை, அதன் பல மொழிகளுக்கு விரிவாக்கப்பட்டது. தற்போது ஹிந்தி உட்பட 17 மொழிகளில் இந்த கூகுள் அசிஸ்டன்ட் சேவையை இயக்கலாம். முன்னதாக இந்த வருட இறுதிக்குள், 30 மொழிகளில் இந்த சேவை கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியிருந்தது. இந்நிலையில், கூகுள் ஆப்பின் பீட்டா வெர்ஷனை பரிசோதனை செய்த சில நிபுணர்கள், புதிதாக 14 மொழிகளில் கூகுள் அசிஸ்டன்ட் சேர்க்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல இந்திய மொழிகளும், உருது, துருக்கிய மொழி உள்ளிட்டவையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனவாம். சமீபத்தில் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் கூகுள் அசிஸ்டன்ட் வேலை செய்யும் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி ஒரே நேரத்தில் ஆங்கிலம், இந்தி அல்லது ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் நம்மால் மொபைலை இயக்க முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் 30 மொழிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக கூகுள் கூறியதால், வரும் நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like