1. Home
  2. வர்த்தகம்

குட் பை யாஹூ

குட் பை யாஹூ

தெரிந்தவர்களுடன் தொடர்பில் இருக்கவும், தெரியாதவர்களுடன் நட்பை வளர்க்கவும் இன்று எண்ணற்ற சமூக வலைதளங்கள் வந்து விட்டன. ஆனால் 90-களின் இறுதியில் தொழில்நுட்பம் பெரிதாக இல்லாத போது பெரிதும் பயன்படுத்தப் பட்டது யாஹூ மெஸஞ்சர் தான்.

ஆனால் இப்போது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ஜி மெயில் என ஏராளமான சோஷியல் நெட்வொர்க்குகள் வந்து விட்டதால், யாஹூவின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. அதனால் ஜூலை 17-ம் தேதியுடன் யாகூ மெஸஞ்சர் சேவையை நிறுத்தப் போவதாக அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் படி நேற்றுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டது யாஹூ.

முக்கியமாக இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மைலிக்களுக்கு யாஹூ தான் முன்னோடி. 1998 முதல் செயல்பட்டு வந்த இந்த சேவை 20 ஆண்டுகள் கடந்து இப்போது முடிவு பெற்றிருக்கிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

பயனாளர்கள் 6 மாதத்திற்குள் தங்களது சாட் ஹிஸ்டரியை வேறு தளத்தில் பாதுகாத்துக் கொள்ளலாம் என நேரம் தந்திருக்கிறது யாஹூ.

newstm.in

Trending News

Latest News

You May Like