ஜியோமியின் மெகா சொதப்பல்... 'போகோ 1' போனில் இந்த அம்சம் கிடையாது!

ஜியோமி நிறுவனம் சில தினங்களுக்கு முன் வெளியிட்ட பெரும் எதிர்பார்ப்போடு வெளியிட்ட போகோ 1 ஸ்மார்ட்போனில், நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் தளங்கள் மூலம் எச்.டி தரத்தில் வீடியோக்களை பார்க்கும் வசதி கிடையாது.
 | 

ஜியோமியின் மெகா சொதப்பல்... 'போகோ 1' போனில் இந்த அம்சம் கிடையாது!

ஜியோமி நிறுவனம் சில தினங்களுக்கு முன் பெரும் எதிர்பார்ப்போடு வெளியிட்ட போகோ 1 ஸ்மார்ட்போனில், நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் தளங்கள் மூலம் எச்.டி தரத்தில் வீடியோக்களை பார்க்கும் வசதி கிடையாது எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சில வாரங்களுக்கு முன், திடீரென போகோ 1 என்ற ஸ்மார்ட்போன் விளம்பரங்கள் மூலம் செய்தித்தாள்களை அலங்கரித்தது ஜியோமி நிறுவனம். mi.com மற்றும் ப்ளிப்கார்ட் இணையதளங்கள் மூலம் இந்த போன் விற்பனை செய்யப்பட்டது. கேம் விளையாட, வீடியோ பார்க்க ஏதுவாக, உச்சகட்ட வேகம், சூப்பர் கேமரா என பல சிறப்பம்சங்களை இந்த போன் கொண்டிருந்தது. ரூ.20,999 என்ற விலை இந்த மொபைலுக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. 

இந்த மொபைலில் மிக முக்கியமான ஒரு வசதி இல்லாத விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது. போகோ 1 மொபைலில் ஸ்ட்ரீமிங் தளங்களான அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஆகியவற்றில் எச்.டி தரத்தில் வீடியோ பார்க்க முடியாதாம். வைட்வைன் எனும் பிரத்யேக சாப்ட்வேரின் உதவியுடன் இந்த இரண்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களும் இயங்குகின்றன. இந்த சாப்ட்வேர், வீடியோக்கள் திருடப்படாமல் இருக்க அந்த இணையதளங்களுக்கு உதவுகின்றது. அந்த சாப்ட்வேரின் உரிமத்தை முழுவதும் பெற்றால் மட்டுமே, எச்.டி வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும். போகோ மொபைல் போனில், எச்.டி-க்கான உரிமங்கள் பெறப்படவில்லையாம். தற்போது புதிய படங்கள் மற்றும், தொடர்களை பிரத்யேகமாக உருவாக்கி வெளியிட்டு வரும் நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசானின் சேவை இப்படி அரைகுறையாக கிடைத்திருப்பது பல போகோ 1 வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதை சாப்ட்பேர் அப்டேட் செய்தால் மட்டும் சரி செய்துவிட முடியாதாம். அனைத்து மொபைகளையும் திரும்பப்பெற்று அதன்பின் தான் இந்த அப்டேட்டை கொடுக்க முடியுமாம். அதுவரை போகோ 1 வைத்திருப்பவர்கள் எஸ்.டி-யில் தான் வீடியோ பார்க்க வேண்டும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP