1. Home
  2. வர்த்தகம்

ஜியோ போன் வாடிக்கையாளர்களே... இந்த செய்தி கேட்டீர்களா...??

ஜியோ போன் வாடிக்கையாளர்களே... இந்த செய்தி கேட்டீர்களா...??

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ஜியோ போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 'ஜியோ ரயில்' என்ற புதிய ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய ரயில்வேயின் பிரத்யேக ஐ.ஆர்.சி.டி.சி ஆப் மூலம் டிக்கெட் புக் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஐ.ஆர்.சி.டி.சி ஆப், தொய்வடைவதாலும், அடிக்கடி தடைபடுவதாலும், தனியார் நிறுவனங்கள் ரயில் புக்கிங்கை கொண்டு வரத் துவங்கியுள்ளனர். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம வெளியிட்ட ரூ.1500க்கு ஜியோ போன் 1 மற்றும், 2999 ரூபாய்க்கு ஜியோ போன் 2-வையும் மதிப்பிலான ஜியோ போனுக்காக பிரத்யேக ஆப் ஒன்றை வடிவடிமைத்துள்ளது.

ஜியோ ரயில் எனப்படும் இந்த ஆப் மூலம், தட்கல் டிக்கெட் புக்கிங், பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் உள்ளிட்ட பல சேவைகளை செய்ய முடியுமாம். மேலும், IRCTC கணக்கு இல்லாதவர்கள், புதிய கணக்கையும் இந்த ஆப் மூலமாக செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் எந்த இடத்தில வருகிறது என்பதை தெரிந்து கொள்ள உதவும் லொகேஷன் சேவை, உணவு ஆர்டர் செய்வது உள்ளிட்ட சேவைகளும் அறிமுகம் செய்யப்படும் என ஜியோ தெரிவித்துள்ளது. இந்த செய்தி, ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like