குடியரசு தினத்திற்கு ப்ளிப்கார்ட்டின் அதிரடி ஆஃபர்கள்!

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட், குடியரசு தினத்தை முன்னிட்டு பல அதிரடி ஆஃபர்களை வெளியிட்டு வருகிறது. இதில் முக்கியமாக பிரபல மொபைல் போன்கள் அதிரடி விலை குறைப்பில் விற்பனைக்கு வருகின்றன.
 | 

குடியரசு தினத்திற்கு ப்ளிப்கார்ட்டின் அதிரடி ஆஃபர்கள்!

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட், குடியரசு தினத்தை முன்னிட்டு பல அதிரடி ஆஃபர்களை வெளியிட்டு வருகிறது. இதில் முக்கியமாக லேட்டஸ்ட் மொபைல் போன்கள் அதிரடி விலை குறைப்பில் விற்பனைக்கு வருகின்றன. 

பிரபல ரெட்மி நோட் 6 ப்ரோ மொபைலின் விலை, ரூ.15,999ல் இருந்து ரூ.12,999 ஆக குறைகிறது. இந்த மொபைல் போனில், 6ஜிபி ரேம், பின்பக்கம் 12 + 5 மெகாபிக்ஸல் கொண்ட இரண்டு கேமராக்களும், முன்பக்கம், 20 + 2 மெகாபிக்ஸல் கொண்ட இரண்டு கேமராக்களும் உள்ளன. 

ஹுவெய் நிறுவனத்தின் ஹானர் 10 லைட் மொபைலின் விலை ரூ.16,999ல் இருந்து ரூ.13,999க்கு குறைகிறது. 24 மெகாபிக்ஸல் AI செல்ஃபி கேமரா, இதன் சிறப்பம்சம். 

4 ஜிபி ரேம் கொண்ட ரியல்மி மொபைலின் விலை ரூ.14,990ல் இருந்து ரூ.12,990க்கு குறைகிறது. சேம்சங் கேலக்சி ஆன் 6 மொபைலின் விலை ரூ.15,490ல் இருந்து ரூ.9,990க்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒப்போ F9ன் விலை ரூ.21,990 என்றும், அசூஸ் 5z மொபைலின் விலை 24,999 எனவும் குறைக்கப்பட உள்ளதாக ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு பெரும் வரவேற்பை பெற்ற போகோ எஃப்1 மொபைலின் விலை ரூ.21,999ல் இருந்து ரூ.18,999க்கு குறைந்துள்ளது. ஐபோன்களின் விலையும் குறையும் என ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

எலெக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமல்லாமல் ஆடைகள், வீட்டு தேவையான பொருட்களும் உட்பட பல, குடியரசு தினத்தை முன்னிட்டு விலை குறைப்பை சந்திக்க உள்ளன. 

வரும் 20, 21 மற்றும் 22ம் தேதிகளில் இந்த விலை ஆஃபர்கள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP