டிஸ்பிளே முழுக்க பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்; விவோவின் 'ஏபக்ஸ் 2019'!

விவோவின் ஏபக்ஸ் 2019 ஸ்மார்ட்போன், பார்சிலோனாவில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவுள்ள நிலையில், அந்த மொபைலில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
 | 

சீன மொபைல் நிறுவனமான விவோ, இதுவரை இல்லாத தொழில்நுட்பங்கள் கொண்ட அதிநவீன ஸ்மார்ட்போனை திட்டமிட்டு வந்தது. இந்நிலையில், தற்போது 'ஏபக்ஸ் 2019' என்ற பெயரில் அதை அறிமுகப்படுத் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மொபைலில், 5ஜி நெட்வர்க் சேவை, ஸ்னாப்டிராகன் 855 ப்ராசசர், 12 ஜிபி ரேம், 256 ஜிபி அல்லது 512 ஜிபி உள்மெமரி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.

மேலும், மொபைல் முன்பக்கம் முழுவதும் டிஸ்ப்ளே இருக்கும் வகையிலும், டிஸ்ப்ளே முழுக்க எந்த இடத்தில் வேண்டுமானாலும் விரல்ரேகையை பதிவு செய்து மொபைலை திறக்கும் வசதியும் இதில் உள்ளதாம். இந்த மொபைலில் சார்ஜ் செய்வதற்கு, ஹெட்போன்களுக்கு, யு.எஸ்.பி-க்கு என எதற்கும் தனி இடம் ஒதுக்கப்படவில்லை. மொத்தமாக 'மேக்போர்ட்ஸ்' எனப்படும் காந்தசக்தியை மையமாக கொண்ட நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேக்போர்ட்ஸ் மூலம் மொபைலை சார்ஜ் செய்வது, டேட்டா பரிமாறிக்கொள்வது போன்றவற்றை செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், டிஸ்பிளேவுக்கு அடியிலேயே ஸ்பீக்கர் இருக்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP