பேட்டரி பிரச்னை; மன்னிப்பு கேட்டது ஆப்பிள்!

பேட்டரி பிரச்னை; மன்னிப்பு கேட்டது ஆப்பிள்!
 | 

பேட்டரி பிரச்னை; மன்னிப்பு கேட்டது ஆப்பிள்!


ஆப்பிள் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டு வரும் பேட்டரி பிரச்னைகள் அந்நிறுவனத்தை பெரும் சர்ச்சைக்கு நடுவே கொண்டு வந்துள்ளது. வேண்டுமென்றே தனது iOS சாப்ட்வேர் மூலம் பழைய போன்களின் திறனை குறைத்துவிட்டதாக அப்பிள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

வேண்டுமென்றே இதை செய்யவில்லை என தெரிவித்துள்ள ஆப்பிள், இந்த போனில் பேட்டரி பிரச்னை உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் மாற்று பேட்டரி வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆப்பிள் மீது பல வாடிக்கையாளர்கள் வழக்கு தொடுத்து வந்த நிலையில், வேறு வழியில்லாமல் அந்நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

முன்னதாக ஆப்பிளின் ஐபோன் 6 மற்றும் 6s மாடல் போன்களில் புதிய அப்டேட் ஒன்றை ஆப்பிள் கொடுத்தது. அந்த அப்டேட் செய்தவர்களின் போன்களில் பல பிரச்னைகள் துவங்கின. எல்லா ஆப்களும் மெதுவாக லோட் ஆனதால் பல வாடிக்கையாளர்கள் பொறுமையிழந்தனர். புதிதாக வெளியாகியுள்ள போன்களை வாங்க வைப்பதற்காக ஆப்பிள் இப்படி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதை மறுத்துள்ள ஆப்பிள், பல வாடிக்கையாளர்களுக்கு போன் அடிக்கடி ஆஃப் ஆகும் பிரச்னை ஏற்பட்டதாகவும், அதை தடுக்கவே அந்த அப்டேட் வழங்கியதாகவும் தெரிவித்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அதனால் போன் மிகவும் மெதுவாக வேலை செய்வதாக ஆப்பிள் ஒத்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து, போன் அடிக்கடி ஆஃப் ஆகும் வாடிக்கையாளர்கள் புதிய பேட்டரி வாங்க வேண்டும் என ஆப்பிள் கூறியிருந்த நிலையில், அந்த பேட்டரியின் விலை சுமார் 5000 ரூபாயில் இருந்து தற்போது 1800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP