1. Home
  2. வர்த்தகம்

2020ல் ஆப்பிளின் முதல் 5ஜி ஐபோன்!

2020ல் ஆப்பிளின் முதல் 5ஜி ஐபோன்!

5ஜி தொழிநுட்பத்தை மொபைல்களில் புகுத்த பெரு நிறுவனங்கள் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் 5ஜி போனை 2020ம் ஆண்டில் வெளியிடும் என தெரிவித்துள்ளது.

4ஜி மொபைல் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் இடையே மிக பிரபலமான நிலையில், அடுத்தாக இன்னும் வேகமான 5ஜி தொழில்நுட்பத்துக்கு மார்க்கெட் தயாராகி வருகின்றது. ஏற்கனவே பல மொபைல்கள் தொழில்நுட்பத்துக்கு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்ட்ராய்டு போன்களான ஜியோமி, ஒப்போ, ஹுவெய், ஆகியவற்றில் 5ஜி மோடம்கள் பொருத்தி தயார்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

5ஜி மோடம் தொழில்நுட்பத்தில், அதிக வெப்பம் வெளியாகும் பிரச்னை உள்ளது. பிரபல குவால்கோம் தொழில்நுட்ப நிறுவனம் அதை மீறி வெற்றகரமான 5ஜி மோடம் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மோடம்களையே மேற்கண்ட நிறுவனங்கள் பயன்படுத்த உள்ளன. ஆனால், ஆப்பிள் நிறுவனம் இன்டல் நிறுவனத்தின் மோடம் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே 8060 என்ற மோடம் மூலம் பல சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ள இன்டல், 8161 என்ற அதிநவீன 5ஜி மோடமை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. தனது முதல் 5ஜி ஐபோன், இன்டலின் 8161 மோடமை மையமாக கொண்டதாக இருக்கும் என ஆப்பிள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மோடம் 2020ம் ஆண்டு தயார் நிலையில் இருக்குமாம். அதனால், ஆப்பிளின் முதல் 5ஜி போன் 2020ம் ஆண்டில் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோமி, ஒப்போ ஹுவெய் ஆகிய நிறுவனங்கள், அடுத்த ஆண்டே 5ஜி போன்களை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளன.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like