1. Home
  2. வர்த்தகம்

ஆப்பிள், சாம்சங்கை கதறவிடுமா ஒன்ப்ளஸ் 6T?

ஆப்பிள், சாம்சங்கை கதறவிடுமா ஒன்ப்ளஸ் 6T?

பிரபல ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது அடுத்த சூப்பர் படைப்பான ஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு வெளியான ஒன்ப்ளஸ் 6 மொபைல், வரலாறு காணாத வரவேற்பை பெற்றது. அட்டகாசமான கேமரா, பெர்பார்மன்ஸ், என வாடிக்கையளர்களை பெரிதும் கவர்ந்தது ஒன்ப்ளஸ் 6.

ஆனாலும், அதில் தாங்கள் தவறவிட்ட சிலவற்றை, தற்போது ஒன்ப்ளஸ் 6T மூலம் வழங்கியுள்ளனர். இந்த மொபைலில், விரல் ரேகை பதிவு செய்யும் வசதி, வழக்கம் போல் பின்னால் இல்லாமல், போனின் முகப்பில், டிஸ்பிளேவுக்கு அடியிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த வசதிக்கு ஏற்கனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ப்ராசசரில் எந்த மாற்றமும் இல்லை. ஒன்ப்ளஸ் 6-ஐ போலவே இதிலும், ஸ்நாப்டிராகன் 845 ஆக்டகோர் ப்ராசசர் உள்ளது.

குறைந்தபட்ச உள் மெமரி, 64 ஜிபியில் இருந்து 128 ஜிபியாக உயர்த்தப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம்/ 128ஜிபி மெமரி; 8ஜிபி ரேம்/ 128ஜிபி மெமரி; 8ஜிபி ரேம்/ 256ஜிபி மெமரி என மூன்று மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. டிஸ்பிளேவின் அகலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 6.41 இன்ச்சில், கவர்ச்சிகரமான 2340x1080 (402ppi) டிஸ்பிளே வைக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான ஒன்ப்ளஸ் 6ன் அதே கேமராவை இதிலும் வைத்துள்ளனர். பின்பக்கம், OIS தொழில்நுட்பத்துடன் 16 மெகாபிக்ஸல் மெயின் கேமராவும், இரண்டாவதாக 20 மெகாபிக்சல் கேமராவும் வைக்கப்பட்டுள்ளன. முன்பக்கம், Gyro-EIS தொழில்நுட்பத்துடன் 16 மெகாபிக்ஸல் கேமரா உள்ளது. இதனால், செல்பி மற்றும் வீடியோக்கள் அட்டகாசமாக தெரியும்.

ஐபோன் X வெளியான பிறகு, நாட்ச் எனப்படும் டிஸ்பிளே வகை பிரபலமானது. ஒன்ப்ளஸ் 6ல் அகலமான பெரிய நாட்ச் இருந்த நிலையில், 6T-யில் அது ஒரு சிறு துளி போல, வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் வெளியாகும் இந்த மொபைலின் விலை, ரூ.36,999-ல் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like