1. Home
  2. வர்த்தகம்

சர்வதேச டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழையும் முதல் இந்தியன் அம்பானி!

சர்வதேச டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழையும் முதல் இந்தியன் அம்பானி!

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்துக்கள், சுமார் 9 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்ததை தொடர்ந்து, சர்வதேச அளவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் நுழையும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஹுருன் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி டாப் 10 இடங்களுக்குள் முதன்முறையாக நுழைந்துள்ளார். சர்வதேச அளவில் டாப் 10 இடங்களுக்குள் ஒரு இந்தியர் நுழைவது இதுவே முதன்முறை. தற்போது அவரின் சொத்துகளின் மதிப்பு 54 பில்லியன் டாலர்கள், அதாவது, ரூ.3,85,000 கோடியாகும்.

இதுகுறித்து ஹுருன் வெளியிட்ட அறிக்கையில், "சர்வதேச டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒரே ஒருவர் முகேஷ் அம்பானி தான். தொலைதொடர்பு, சில்லறை வணிகம் மற்றும் எரிபொருள் துறைகளை மையமாக கொண்டு இவரது சொத்துக்கள் உள்ளன. இவர் துவங்கிய ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், முதல் 4ஜி நிறுவனமாக, ஜப்பான் மற்றும் இந்தியாவில் இலவச ரோமிங் சேவையை அறிமுகபடுத்தியுள்ளது" என்று கூறியது.

ஹுருன் நிறுவனத்தின் 2019ம் ஆண்டு பட்டியலின் படி, பில்லியன் டாலர் சொத்து மதிப்புடையவர்கள் இந்தியாவில் 104 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 32 பேர் சேர்ந்த நிலையில், 28 பேர் இந்த ஆண்டு அதிலிருந்து இறங்கியுள்ளனர்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like