1. Home
  2. வர்த்தகம்

அடேங்கப்பா... 4 பின்பக்க கேமராவா? அசத்தும் சாம்சங்

அடேங்கப்பா... 4 பின்பக்க கேமராவா? அசத்தும் சாம்சங்

கேமராவில் புதிய உச்சத்தை தொட முயற்சித்திருக்கும் சாம்சங் நிறுவனம், 4 பின்பக்க கேமராக்கள் கொண்ட தனது புதிய கேலக்சி A9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இரட்டை கேமரா கொண்ட மொபைல் போன்கள் தற்போது ட்ரெண்டாகி வரும் நிலையில், ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் அதில் பல புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றன. இதில் அடுத்த முயற்சியாக, ஹுவேயி நிறுவனம், P20 Pro என்ற ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதில், 3 பின்பக்க கேமராக்கள் இருந்தது. தற்போது அதை வீழ்த்தும் நோக்குடன், 4 பின்பக்க கேமராக்களுடன் சாம்சங் நிறுவனம் A9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், 24 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு சென்சார், 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 10 மெகாபிக்சல் டெலிபோட்டோ சென்சார் ஆகிய 4 கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. முன்பக்கம், 24 மெகாபிக்சல் கொண்ட நவீன கேமராவும் உள்ளது.

6.3 இன்ச் சூப்பர்அமாலேட் ஸ்க்ரீன் உள்ளது. 3800 mAh பேட்டரி, ஸ்னாப்ட்ராகன் 660 ப்ராசசர், 128 ஜிபி மெமரி, 6 அல்லது 8 ஜிபி ரேம் போன்ற வசதிகளும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.

கேமரா ஆர்வலர்களை தெறிக்கவிடப் போகும் இந்த மொபைல், அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிடப்படுகிறது. இதன் விலை குறித்து எந்த தகவலும் தற்போதைக்கு இல்லை.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like