விரைவில் 5ஜி! தீவிரமாக நடக்கும் பணிகள்

விரைவில் 5ஜி! தீவிரமாக நடக்கும் பணிகள்
 | 

விரைவில் 5ஜி! தீவிரமாக நடக்கும் பணிகள்


சர்வதேச அளவில் 5ஜி எனப்படும் ஐந்தாவது தலைமுறை தொலைத்தொடர்பு சேவைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 4ஜி சேவைகள் பயன்பாட்டுக்கு வந்தத்தில் இருந்து இணைய சேவைகள் இதுவரை இல்லாத அளவு பிரபலமாகியுள்ளன. அதேபோல இணைய வேகம் அதிகரித்து, விலையும் குறைந்துள்ளது.

இந்நிலையில், 5ஜி சேவைக்காக வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் காத்திருக்கின்றன. ஆனால், 5ஜி சேவைக்கான தொழில்நுட்ப வரையறைகள் இன்னும் வகுக்கப்படாததால், அதில் முதலீடு செய்வது குறித்த திட்டங்கள் எதுவும் தயாராகவில்லை.

இந்நிலையில், தொலைத்தொடர்பு சேவைக்கான கட்டுமான தேவைகளை நிர்ணயம் செய்யும் 3GPP அமைப்பு, முதற்கட்ட தேவைகள் என்னவென்பதை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும். அடுத்த வருடம் 5ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது, அதற்கு தேவைப்படும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை, தொழில்நுட்ப திட்டங்கள் குறிப்பிட்ட முழு விவரங்களும் முடிவு செய்யப்பட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP