1. Home
  2. வர்த்தகம்

ஜனவரி 1 முதல் 'சிப்' இல்லாத டெபிட் கார்டு செயல்படாது! ஏன் தெரியுமா?


வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பழைய தொழில்நுட்பத்திலான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாக மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்கும்பொருட்டு பாதுகாப்பு அம்சம் நிறைந்த சிப் பொருத்திய கிரெடிட் மற்றூம் டெபிட் கார்டுகளை வழங்கும்படி ரிசர்வ் வங்கி, அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை பெரும்பாலான வங்கிகள் செயல்படுத்தவில்லை. ரிசர்வ் வங்கி உத்தரவுபடி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின், பின்புறத்தில் மேக்னடிக் ஸ்டிரைப் எனும் காந்தக்கோடுகள் உள்ளன. அதை மாற்றிவிட்டு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சிறிய மின்னணு சிப் பொருத்திய கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. வாடிக்கையாளர்களுக்கு சிப் வைக்கப்பட்ட கார்டு வழங்குவாதற்கான காலக்கெடு வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு பழைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் செல்லாமல் போகக்கூடும்.

Newstm.in


newstm.in

Trending News

Latest News

You May Like