பேங்குக்கு போக வேணாம்; இனி எல்லாமே வாட்ஸ்அப் தான்!

கோட்டக் மகேந்திரா வங்கி மற்றும் சரஸ்வத் கூட்டமைப்பு வங்கி, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பேங்கிங் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்
 | 

பேங்குக்கு போக வேணாம்; இனி எல்லாமே வாட்ஸ்அப் தான்!

கோட்டக் மகேந்திரா வங்கி மற்றும் சரஸ்வத் கூட்டமைப்பு வங்கி, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பேங்கிங் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், பல்வேறு புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. பேடிஎம், ஏர்டெல் மணி போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பேமெண்ட்ஸ் வங்கி சேவையில் கால்பதித்த வாட்ஸ்அப், அதை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றது.

சமீபத்தில் வாட்ஸ்அப் பிசினஸ் என்ற புதிய ஆப் வெளியிடப்பட்டது. இதன்மூலம், நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டது. தற்போது வாட்ஸ் அப் மூலம் பேங்கிங் சேவையை வழங்க, கோட்டக் மகேந்திரா வங்கி மற்றும் சரஸ்வத் கூட்டமைப்பு வங்கி நடவடிகைககள் எடுத்து வருகின்றன. 

கோட்டக் மகேந்திரா வங்கி வாடிக்கையாளர்கள், க்ரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தொடர்பான தங்களது கேள்விகளை வாட்ஸ்அப் மூலம் கேட்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
அதேபோல சரஸ்வதி கூட்டமைப்பு வங்கி, இனி எஸ்.எம்.எஸுக்கு பதிலாக தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலமே நோடிபிகேஷன் அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஸ்டேட்மெண்ட், மொபைல் பேங்கிங், விண்ணப்பங்கள் உட்பட பல்வேறு சேவைகளையும் படிப்படியாக வழங்க உள்ளதாக சரஸ்வத் வங்கி தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP