ஃபேஸ்புக்கில் பயனாளர்களின் விவரங்கள் திருட்டு

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றாக ஃபேஸ்புக்கில் கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 2.9 கோடி பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.ஹேக்கர்கள் டிஜிட்டல் லாகின் மூலம் விவரங்களை திருடியதாக தெரிவித்துள்ளது.
 | 

ஃபேஸ்புக்கில் பயனாளர்களின் விவரங்கள் திருட்டு

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றாக ஃபேஸ்புக்கில் கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 2.9 கோடி பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையதள திருட்டு மூலம் 5 கோடிபேரின் தகவல்கள் திருடப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் பகீர் தகவலை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2 கோடியே 90 லட்சம் பயனர்களின் தகவல் திருடப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் டிஜிட்டல் லாகின் மூலம் விவரங்களை திருடிவிட்டதாகவும், நிதி தொடர்பான விவரங்களோ, மிகவும் தனிப்பட்ட விவரங்களோ திருடப்படவில்லை எனவும் ஃபேஸ்புக் கூறியுள்ளது. 

குறிப்பாக 1 கோடியே 40 லட்சம் பயனர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளது என்றும், அவர்களின் மொழி, உறவுநிலை, மதம், ஊர், பிறந்தநாள், படிப்பு, பணி, கடைசியாக சென்றுவந்த 10 இடங்கள், நட்பு வட்டத்தில் உள்ளவர்கள், கடைசியாக செய்யப்பட்ட 15 தேடல்கள் போன்ற விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக பகீர் தகவலை தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

Newstm.in 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP