அமேசானில் ஷாப்பிங் செய்கிறீர்களா? ஜாக்கிரதை...

உலகின் மிகப்பெரிய இணையதள ஷாப்பிங் நிறுவனமான அமேசானில் வாடிக்கையாளர்களுக்கு புதிய பிரச்னை ஒன்று உருவாகி வருகிறது. அநேக பொருட்கள் வாங்கிய பின், வாடிக்கையாளர்களுக்கு அது பிடிக்கவில்லை என்றாலோ, உடைந்து போய் இருந்தாலோ அவற்றை இலவசமாக திருப்பி கொடுக்கும் வசதி அமேசானில் உள்ளது.
 | 

ஆனால், சமீக காலமாக குறிப்பிட்ட அளவு பொருட்களை திருப்பி அனுப்பும் வாடிக்கையாளர்களை அமேசான் நிறுவனம் தடை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் பலர் தங்களது அமேசான் கணக்கு காரணமின்றி முடக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறினர். அமேசானின் விதிமுறைகளின் படி, வாடிக்கையாளர்களுக்கு சேவையை எந்த நேரத்திலும் நிறுத்திக் கொள்ள அந்நிறுவனத்திற்கு உரிமை உண்டு. ஆனால், சரியான காரணம் சொல்லாமல் பலரது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது பல புருவங்களை உயர்த்தியுள்ளது. 

முடக்கப்படுவதற்கு முன் பலர், அமேசானில் இருந்து தங்களுக்கு ஓரு ஈமெயில் வந்ததாகவும், அதில், ஏன் அடிக்கடி பொருட்களை திருப்பி அனுப்புகிறீர்கள் என கேட்டதாகவும் கூறியுள்ளனர். 

வாடிக்கையாளர்கள் பொருட்களை அடிக்கடி திருப்பி அனுப்புவதால், அந்த பொருட்களை அமேசானில் விற்கும் சில வணிகர்களுக்கு கடும் இழப்பு ஏற்படுவதாக அமேசான் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், "ஆடர் செய்த பொருளை விட்டுவிட்டு எதையோ எனக்கு அனுப்பியுள்ளார்கள். இதை திருப்பி கொடுக்காமல் நான் என்ன செய்ய முடியும்?" என்கிறார் முடக்கப்பட்ட ஒரு வாடிக்கையாளர். ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பொருட்களை ஆடர் செய்யும் பொது அதில், 20-25 பொருட்களை திருப்பி கொடுக்கும் நிலை பலருக்கு ஏற்படுகிறது என்பது பலரது கருத்து. 

இலவசமாக ரிட்டர்ன் செய்துகொள்ளலாம் என அமேசான் கூறினாலும், வாடிக்கையாளர்கள் இனி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது.

அமேசானும் தன் பங்குக்கு சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். 'ஃப்ரீ ரிட்டர்ன்ஸ்' வசதி மீது வாடிக்கையாளர்கள் நம்பிக்கை இழந்துவிட்டால், பிறகு சின்ன வணிகர்கள் விற்கும் பொருட்களை தைரியமாக வாங்க பலர் முன்வரமாட்டார்கள். இதனால் மேலும் இழப்பு தான் ஏற்படும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP