ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடோபோன் அதிரடி

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
 | 

ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடோபோன் அதிரடி

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு கவலை அளிக்கும் வகையில் ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஜியோ நிறுவனம் வழங்கும் அதிரடி சலுகைகளால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்துவதில்லை. இதனால் ஏற்படும் பெரும் வருமான இழப்பை தடுக்க, புதிய திட்டத்தை ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் அமல்படுத்த உள்ளது. அதன்படி குறைந்தபட்ச தொகையான 35 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்யவில்லை என்றால், இனி இன்காமிங் கால் வசதியும் இருக்காது என அந்நிறுவனங்கள் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவன வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க திட்டமிட்டுள்ளன. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP