ரிசர்வ் வங்கி கெடுபிடி; பேடிஎம் பயனாளர்களுக்கு நல்ல செய்தி!

பேடிஎம், அமேசான் பே, போன்பே உள்ளிட்ட மொபைல் வாலெட் நிறுவங்களின் வாடிக்கையாளர்களை, ஆன்லைனில் நடைபெறும் மோசடி பரிவர்த்தனைகள் இருந்து பாதுகாக்க, பல புதிய விதிகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.
 | 

ரிசர்வ் வங்கி கெடுபிடி; பேடிஎம் பயனாளர்களுக்கு நல்ல செய்தி!

பேடிஎம், அமேசான் பே, போன்பே உள்ளிட்ட மொபைல் வாலெட் நிறுவங்களின் வாடிக்கையாளர்களை, ஆன்லைனில் நடைபெறும் மோசடி பரிவர்த்தனைகளில் இருந்து பாதுகாக்க, பல புதிய விதிகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.

 கடந்த சில ஆண்டுகளில் மொபைல் வாலெட் நிறுவனங்களின் ஆதிக்கம் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பேடிஎம், அமேசான் பே, போன்பே போன்ற நிறுவனங்கள், தங்கள் வாலெட் கணக்குகள் மூலம் பல ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. அதேநேரம், ஆன்லைன் பரிவர்த்தனையின் போது வாடிக்கையாளரின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க பல விதிகள் நடைமுறையில் உள்ளன.

ஆனால், பேடிஎம் உள்ளிட்ட பல நிறுவனங்கள், இதுபோன்ற புகார்களை நேரடியாக பதிவு செய்ய வாடிக்கையாளர்களுக்கு கஸ்டமர் கேர், டோல் ப்ரீ தொலைபேசி எண் போன்ற போதிய சேவைகளை வழங்குவதில்லை. இதனால் பல வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பல புதிய விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 

இதன்படி,

* மொபைல் வாலெட் மூலம் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும், எஸ்எம்எஸ், ஈ-மெயில் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட வேண்டும். அந்த எஸ்.எம்.எஸ்-ஸில், அனுமதியில்லாமல் பரிவர்த்தனைகள் நடைபெற்றால் அது குறித்து வாடிக்கையாளர் புகார் கொடுக்க ஒரு தொலைபேசி எண் மற்றும் ஈ-மெயில் ஐடி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்

* மொபைல் வாலெட் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயமாக அந்தந்த நிறுவனத்தின் எஸ்.எம்.எஸ், ஈமெயில் மற்றும் நோட்டிபிகேஷன் சேவையை பெற்றிருக்க வேண்டும்.

* மோசடி பரிவர்த்தனைகள் குறித்து புகாரளிக்க, மொபைல் வாலெட் நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய டோல் ப்ரீ கஸ்டமர் கேர் உதவி எண், எஸ்.எம்.எஸ், ஈ-மெயில் உள்ளிட்ட புகார் சேவைகளை பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

* மோசடி பரிவர்த்தனைகள் குறித்து புகாரளிக்க தனியாக ஒரு லிங்க்கை, நிறுவனங்கள் தங்களது மொபைல் ஆப், இணையதளம் உள்ளிட்டவற்றில் காண்பிக்க வேண்டும்.

* மோசடி பரிவர்த்தனைகள் குறித்து அனுப்பப்படும் புகார்களை அங்கீகரித்து, உடனடியாக ஒரு பதில் எஸ்எம்எஸ், ஈ-மெயிலை வாடிக்கையாளர்களுக்கு நிறுவனங்கள் கொடுக்க வேண்டும். இந்த பதிலில், புகார் அளிக்கப்பட்ட நேரம், புகார் எண் உள்ளிட்ட விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

* நிறுவனத்தின் தவறால், வாடிக்கையாளர்களுக்கு பண இழப்பு ஏற்பட்டிருந்தால், புகார் அளிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் முழு பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும்.

* மோசடி பரிவர்த்தனை குறித்து வாடிக்கையாளர் தரப்பிலிருந்து புகார் வராவிட்டால் கூட, பணத்தை உடனடியாக நிறுவனங்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும்

* மோசடி நடந்து நான்கு முதல் ஏழு நாட்களுக்குள், வாடிக்கையாளர் புகார் அளித்தால், இழந்த தொகை அல்லது ரூ.10,000; இதில் எது குறைவோ அதை வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.

* ஏழு நாட்களுக்குப் பிறகு மோசடி குறித்து புகார் அளிக்கப்பட்டால், ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி அதற்கான நடவடிக்கையை வாலெட் நிறுவனமே எடுத்துக்கொள்ளலாம்.

* வாடிக்கையாளர் இழந்த பணத்தை திருப்பிக் கொடுப்பது தொடர்பான அனைத்து புகார்களையும் 10 நாட்களுக்குள் தீர்த்து வைக்க வேண்டும்.

* வேறு எந்தவிதமான புகாராக இருந்தாலும் 90 நாட்களுக்குள் அது குறித்து நடவடிக்கை எடுத்து தீர்த்து வைக்க வேண்டும்.

* வாடிக்கையாளரை அடையாளம் காணும் KYC-யை அனைத்து வாடிக்கையாளர்களும் செய்திருக்க வேண்டும். செய்யாத வாடிக்கையாளர்களின் வாலெட்கள், பிப்ரவரி மாதம் முதல் செயல்படாது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP