ரூ.700 கோடியில் ஹாப்திக் நிறுவன பங்குகளை கைப்பற்றியது ரிலையன்ஸ் ஜியோ

மும்பையில் இயங்கி வரும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமான ஹாப்திக் நிறுவனத்தின் பங்குகளை ரூ.700 கோடி மதிப்பில் ரிலையன்ஸ் ஜியோ கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள பங்குகள் ஹாப்திக் நிறுவனர்கள் மற்றும் ஊழியர்கள் வசம் உள்ளது.
 | 

ரூ.700 கோடியில் ஹாப்திக் நிறுவன பங்குகளை கைப்பற்றியது ரிலையன்ஸ் ஜியோ

மும்பையில் இயங்கி வரும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமான ஹாப்திக் நிறுவனத்தின் பங்குகளை ரூ.700 கோடி மதிப்பில் ரிலையன்ஸ் ஜியோ கைப்பற்றியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சார்பில், ஹாப்திக் நிறுவனத்துக்கு ரூ.230 நிதியை வழங்கியுள்ளது. மேலும், ரூ.470 கோடி அளவுக்கு இனி வரும் காலங்களில் ஜியோ முதலீடு செய்கிறது. ஆக மொத்தம், ரூ.700 கோடி மதிப்பில் ஹாப்திக் நிறுவனத்தின் 87 சதவீத பங்குகளை ஜியோ வாங்கியுள்ளது. மீதமுள்ள பங்குகள் ஹாப்திக் நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் ஊழியர்கள் வசம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ சார்பில் முதலீடு செய்யப்படுவதன் மூலமாக, ஹாப்திக் நிறுவனத்தில் ஏற்கெனவே முதலீடு செய்திருந்த டைம்ஸ் இண்டர்நெட் நிறுவனம் தனது பங்குகளை விலக்கிக் கொள்கிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP