400 ரூபாய்க்குள் அட்டகாசமான போஸ்ட் பெய்ட் பிளான்ஸ்!

நமது 11 வது விரலாக மாறி விட்டது நம்முடைய ஃபோன்.
 | 

400 ரூபாய்க்குள் அட்டகாசமான போஸ்ட் பெய்ட் பிளான்ஸ்!

நமது 11 வது விரலாக மாறி விட்டது நம்முடைய ஃபோன். குறைந்த கட்டணத்தில் நிறைய சலுகைகள் கிடைப்பதும் இதன் பயன்பாடு அதிகரிக்க முக்கியக் காரணம். ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற ஆஃபர்களை வாரி இறைக்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள், போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அப்படியல்ல, ப்ரீ பெய்டை விட அதிக பில் வருகிறது என்பதாலேயே பலர் போஸ்ட் பெய்டை தவிர்த்திடுவார்கள். 

ஆனால் 400 ரூபாய்க்குள் சிறந்த போஸ்ட் பெய்ட் பிளான்கள் இருக்கின்றன. 

ஜியோ 199 போஸ்ட் பெய்ட் 
இதில் மாதம் முழுவதும் அன்லிமிடெட் கால் வசதியுடன் 25 ஜி.பி டேட்டா கிடைக்கிறது. டேட்டா முழுவதும் முடிந்து விட்டால் எக்ட்ஸ்ராவாக பயன்படுத்தும் ஒவ்வொரு ஜி.பி-க்கும் 20 ரூபாய் வசூலிக்கிறது ஜியோ. இதோடு காம்ளிமென்ட்ரியாக ஜியோ ஆப்களும், தினம் 100 எஸ்.எம்.எஸ்ஸும் இலவசம். 

ஏர்டெல் 399 போஸ்ட் பெய்ட் 
இதிலும் அன்லிமிடெட் கால் வசதியுடன் 20 ஜி.பி டேட்டா கிடைக்கிறது. உபயோகப் படுத்தாத டேட்டே பேலன்ஸை அடுத்த மாதத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வழியும் இருக்கிறது. இந்த பிளானில் வாடிக்கையாளர்கள் விங்க் மியூஸிக்கை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். 

வோடஃபோன் 399 போஸ்ட் பெய்ட் 
இந்த பிளானில் 40 ஜி.பி டேட்டாவுடன் அன்லிமிடெட் கால் வசதி இருக்கிறது. இதன் மூலம் ஒரு வருடத்திற்கு வோடஃபோன் ப்ளே, அமேசான் ப்ரைம் ஆகியவற்றை 1 வருடத்திற்கு இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அதோடு ஒவ்வொரு மாதமும் இந்த பிளானோடு 399 ரூபாய் மதிப்புள்ள கூப்பனையும் வழங்குகிறது வோடஃபோன் நிறுவனம். 

ஐடியா 389 போஸ்ட் பெய்ட் 
20 ஜி.பி டேட்டாவுடன் அன் லிமிடெட் கால் வசதியை மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம். மீதமாகும் டேட்டாவை அடுத்த மாதத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றுடன் 3000 எஸ்.எம்.எஸ்-கள் இலவசமாகக் கிடைக்கிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP