பெட்ரோல் வாங்கினால் ரூ.7,500; பேடிஎம்-ன் சூப்பர் ஆஃபர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை பயன்படுத்தி புதிய வாடிக்கையாளர்களை கவர பேடிஎம் நிறுவனம் அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது.
 | 

பெட்ரோல் வாங்கினால் ரூ.7,500; பேடிஎம்-ன் சூப்பர் ஆஃபர்

பெட்ரோல் விலை உயர்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை பயன்படுத்தி புதிய வாடிக்கையாளர்களை கவர பேடிஎம் நிறுவனம் அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது.

பேடிஎம் பயன்படுத்தி பெட்ரோல் வாங்கினால், ரூ.7,500 வரை கேஷ்பேக் கிடைக்கும் என்ற புதிய ஆஃபர் தான் இப்போதைய ஹாட் டாக். இந்த ஆஃபரை பயன்படுத்தி, ஒரு ஆண்டு முழுவதும் பல விதமான கேஷ்பேக்களை பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேடிஎம் பயன்படுத்தி குறைந்தபட்சம் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடுபவர்கள் கேஷ்பேக் ஆஃபருக்கு தகுதி பெறுவார்கள். அதன்பின் ஒவ்வொரு வாரமும் பேடிஎம் மூலம் பெட்ரோல் போடும்போதும், மின்சார பில், திரைப்பட டிக்கெட் போன்ற கேஷ்பேக் கிடைக்கும். 10வது முறை பெட்ரோல் போடும் போது, நேரடியாக ரூ.1350 கேஷ்பேக் கிடைக்கும். ஒரே வாரத்தில் பலமுறை பெட்ரோல் போடுபவர்களுக்கு, முதல் பரிவர்த்தனைக்கு மட்டும் கேஷ்பேக் கிடைக்கும்.  

அதன்பின், 11வது, 21வது, 31வது, 41வது என ஒவ்வொரு 10 முறையும் மீண்டும் முதலில் இருந்து இந்த ஆஃபரை திரும்ப புதுப்பித்துக் கொள்ளலாம். 2019 ஆகஸ்ட் 1ம் தேதி வரை, ஆண்டு முழுவதும் இதுபோன்ற கேஷ்பேக்கை பெறலாம். 

ஒவ்வொரு பரிவர்த்தனை முடிந்தவுடன், 48 மணி நேரத்தில் கேஷ்பேக் அல்லது, ப்ரோமோ கோடு கொண்ட எஸ்.எம்.எஸ் கிடைக்கும். அதை பயன்படுத்தி, கேஷ்பேக் பெற்றுக்கொள்ளலாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP