அடுத்த 5 ஆண்டுகளுக்கு முகேஷ் அம்பானி தான் ரிலையன்ஸின் தலைவர்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
 | 

அடுத்த 5 ஆண்டுகளுக்கு முகேஷ் அம்பானி தான் ரிலையன்ஸின் தலைவர்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 

இந்திய பெருநிறுவனங்களில் முக்கியமானது ரியலைன்ஸ. இதன் தலைவராக தொழிலதிபர் முகேஷ் அம்பானி இருக்கிறார். இதன் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 33வது இடத்தில் இருப்பவர்.

இந்த நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக முக்கேஷ் அம்பானியை அடுத்த  5 ஆண்டுகளுக்கு தலைவராக தேர்வு செய்யும் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதன்படி, வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 98.5 சதவிகித வாக்குகளும் எதிராக 1.48 சதவிகி வாக்குகளும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற்ற முகேஷ் அம்பானிக்கு ஆண்டுக்கு 4.17 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் சுமார் 59 லட்சம் ரூபாய் அளவிலான இதரப் படிகளும் வழங்கப்படவுள்ளது.

முன்னதாக 1977 முதல் ரிலையன்ஸ் இயக்குநர் குழுவில் இடம்பிடித்திருந்த முகேஷ் அம்பானி, அவரது தந்தையும், ரிலையன்ஸ் நிறுவனருமான திருபாய் அம்பானி இறந்தப் பின் 2002-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP