சந்தை போட்டிகளில் தொலைந்து போன நிறுவனம்...!

கடந்த 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நம் நாட்டைச் சேர்ந்த மொபைல் நிறுவனமான கார்பன் (korbon) சென்ற ஏப்ரல் மாதம் கம்பெனியை மூடி திவால் என அறிவிக்க பெறுநிறுவன விவகாரத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளது.
 | 

சந்தை போட்டிகளில் தொலைந்து போன நிறுவனம்...!

கடந்த 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நம் நாட்டைச் சேர்ந்த மொபைல் நிறுவனமான கார்பன் (korbon) சென்ற ஏப்ரல் மாதம் கம்பெனியை மூடி திவால் என அறிவிக்க பெறுநிறுவன விவகாரத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து கார்பன் , மைக்ரோ மேக்ஸ், லாவா போன்ற உள்நாட்டிலேயே செல்ஃபேன்களை தயாரித்து வந்த நிறவனங்கள் வெகு வேகமாக வளர்ந்து வந்தன. அந்நிலையில் கடந்த  2015 ஆம் ஆண்டிலிருந்து சீன மொபைல்களின் இறக்குமதி, நம் நாட்டில் அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் விற்பனையில் பெரும் சரிவை சந்திக்கத் தொடங்கின.

தற்போதைய நிலவர புள்ளிவிவங்களின் படி 66 சதவீத இந்திய மொபைல் ஃபோன் வர்த்தகத்தை சீன  நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. மீதம் உள்ள வர்த்தகம் அமெரிக்க நிறுவனங்களின் கைகளில் உள்ளது.

சீனாவின் விவோ, ஷயோமி போன்ற மொபைல் ப்ராண்ட்கள், நம் நாட்டில் உள்ள 29 சதவீத சந்தை விற்பனையை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன. இந்நிலையில் கார்பன் மொபைல் ஃபோன் உற்பத்தி நிறுனம் வெளியிட்டுள்ள திவால் நோட்டீஸ், மொபைல் ஃபோன் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய உற்பத்தி நிறுவனங்களின் தோல்விக்கான தொடக்கமாக இருந்து விடுமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

ஏனெனில் சீன நிறுவனங்களின் மலிவான தயாரிப்புகள் மற்றும் உலக அளவில் நிலவி வரும் வர்த்தக போட்டிகளில் இந்திய நிறுவனங்கள் தகுந்த சவாலான சூழலை ஏனைய நாட்டு நிறுவனங்களுக்கு உருவாக்கும் வகையில் சந்தை நிபுணத்துவம் பெறவில்லையோ என்ற சந்தேகத்தை நம்மிடம் தோற்றுவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP