வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் சேவை துவக்க வேண்டி ரிசர்வ் வங்கிக்கு கடிதம்!

ரிசர்வ் வாங்கி ஆளுநருக்கு வாட்ஸ்அப் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், ஏர்டெல், பேடிஎம், கூகுள் நிறுவனங்களை போல, வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் சேவையை, அதன் 20 கோடி இந்திய வாடிக்கையாளர்களுக்கும் கொண்டு சேர்க்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
 | 

வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் சேவை துவக்க வேண்டி ரிசர்வ் வங்கிக்கு கடிதம்!

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு வாட்ஸ்அப் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், ஏர்டெல், பேடிஎம், கூகுள் நிறுவனங்களை போல, வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் சேவையை, தனது 20 கோடி இந்திய வாடிக்கையாளர்களுக்கும் கொண்டு சேர்க்க அனுமதி கோரியுள்ளது.

உலகிலேயே மிக பிரபலமான மெசேஜிங் சேவையான வாட்ஸ்அப், பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ஏற்கனவே, எமோஜி, வீடியோ காலிங், குரூப் காலிங் உட்பட பல சேவைகள் துவக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் அந்நிறுவனம் முழு வீச்சில் தனது பேமெண்ட்ஸ் சேவையை துவக்க முயற்சித்து வருகிறது. 

ஏற்கனவே இந்தியாவில், பேடிஎம், ஏர்டேல், சமீபத்தில் கூகுள் பே உள்ளிட்ட பல நிறுவனங்கள், பேமென்ட்ஸ் சேவையை வழங்கி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, வாட்ஸ்அப் நிறுவனமும், தனது பேமென்ட்ஸ் திட்டம் குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. சில மாதங்களுக்கு முன், தனது பேமெண்ட்ஸ் சேவையை வாட்ஸ்அப் சோதனை செய்து பார்த்தது. அதில், 10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வெற்றிகரமாக வழங்கப்பட்டது. 

இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவன தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் ரிசர்வ் வங்கிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பீம் யுபிஐ-யின் படி வடிவமைக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் சேவையை இந்தியாவின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொண்டு சேர்க்க அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம், மக்களுக்கு பயனுள்ள, பாதுகாப்பான சேவையை வழங்க முடியும்" என கோரியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP