ஸ்விகி நிறுவனத்துக்கு ஜாக்பாட்; ரூ.7000 கோடி முதலீடு!

பிரபல இணைய மொபைல் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, சுமார் 7000 கோடி ரூபாய் அளவில் முதலீட்டை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நாஸ்பர்ஸ் நிறுவனமும், சீனாவின் டென்சென்ட் நிறுவனமும் இதில் பெரும் பங்கு வகித்துள்ளன.
 | 

புட்பாண்டா, ஸோமாட்டோ நிறுவனங்களுக்கு போட்டியாக துவக்கப்பட்ட ஸ்விகி உணவு டெலிவரி ஆப், இந்தியாவிலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. பெரிய நகரங்கள் மட்டுமல்லாமல், பல்வேறு சிறிய நகரங்களில் துவக்கி அதிரடி அவர்களை வழங்கிவந்தது ஸ்விகி. அமெரிக்காவின் ஊபர் நிறுவனத்தின், ubereats ஆப்புடன் சமீபத்தில் கடும் போட்டியை சந்தித்து வருகிறது ஸ்விகி.

இந்த நிலையில் அந்த நிறுவனத்துக்கு சுமார் 7000 கோடி ரூபாய் அளவில் முதலீடு கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவை  சேர்ந்த நாஸ்பர்ஸ் நிறுவனம் இதில் பெரும் பங்கு வகித்ததாக ஸ்விகி தெரிவித்துள்ளது. இதுபோக, சீனாவை சேர்ந்த டென்சென்ட் நிறுவனம், ஹில்ஹவுஸ் கேபிடல் ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன.

இந்த மொத்த முதலீட்டையும் சேர்த்து பார்க்கும் போது ஸ்விகி நிறுவனத்தின் ஒட்டு மொத்த மதிப்பு 20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என கூறப்படுகிறது. இந்த புதிய முதலீட்டை வைத்து மேலும் பல மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. தாங்கள் முதலீடு செய்ததில் இருந்து மாதத்திற்கு கிடைக்கும் ஸ்விகி ஆடர்கள் பத்து மடங்காக உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் உள்ள இரண்டாவது, மூன்றாவது ரக நகரங்களுக்கும் ஸ்விகி சேவையை வழங்கி வருவதாகவும், நாஸ்பர்ஸ் நிறுவனத்தின் லெரி இல்க் தெரிவித்தார். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP