கூகுள் சுந்தர் பிச்சையின் பதவிக்கு ஆபத்தா?

கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் உட்கட்ட கருத்துக்கணிப்பில், நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சையின் நிர்வாகம் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
 | 

2017ம் ஆண்டை விட, 2018ம் ஆண்டில், சுந்தர் பிச்சை மீதும், அவரது நிர்வாக அணியின் மீதும் உள்ள நம்பிக்கை சரிந்து வருவதாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் அதன் ஊழியர்களிடம், நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை; நிறுவன வளர்ச்சி; ஊழியர்கள் நலன் குறித்து ஒரு ஆய்வு நடத்தும். 2017ம் ஆண்டு முடிவில் நடத்தப்பட்ட ஆய்வில், சுந்தர் பிச்சை மீதும், அவரது நிர்வாகத்தின் மீதும் 92% நம்பிக்கை இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், அது 74 சதவீதமாக சரிந்துள்ளது.

மேலும், தங்களது வருமானம் குறித்தும், 54 சதவீத தொழிலாளர்களை ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக இதில் தெரிய வந்துள்ளது. நவம்பர் மாதம், உயர்மட்ட ஊழியர்கள் மீதான பாலியல் தொந்தரவு புகார்கள் குறித்து, கூகுள் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என, உலகம் முழுவதும் உள்ள கூகுள் நிறுவன ஊழியர்கள் 20,000க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க சுந்தர் பிச்சை உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP