ப்ளிப்கார்ட்டை வாங்குகிறதா அமேசான்?

சர்வதேச அளவில் மிகபெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படும் ப்ளிப்கார்ட்டை வாங்க திட்டமிட்டு வருகிறது.
 | 

ப்ளிப்கார்ட்டை வாங்குகிறதா அமேசான்?

ப்ளிப்கார்ட்டை வாங்குகிறதா அமேசான்?

சர்வதேச அளவில் மிகபெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படும் ப்ளிப்கார்ட்டை வாங்க திட்டமிட்டு வருகிறது. 

இந்திய நிறுவனமான ப்ளிப்கார்ட், முன்னாள் அமேசான் ஊழியர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சாலால் 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தியாவின் சுமார் 40% ஆன்லைன் வர்த்தக வியாபாரம் ப்ளிப்கார்ட் மூலமாகவே நடப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் இருக்கும் அமேசான், பெரிய அளவில் இந்திய மார்க்கெட்டை பிடிக்கும் நோக்கில், பலசரக்கு பொருட்களை கூட ஆன்லைன் ஆடர் செய்து, வீட்டில் டெலிவரி செய்யும் திட்டங்களை துவக்கியுள்ளது. 

ப்ளிப்கார்ட்டுடனான போட்டியை சமாளிக்க, சுமார் 5 பில்லியன் டாலர்களை இந்திய அமேசானில் முதலீடு செய்யவுள்ளதாக அந்நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், அசுர வேகத்தில் வளர திட்டமிடும் அமேசானை சமாளிக்க, ப்ளிப்கார்ட் நிறுவனம், வால்மார்ட் என்னும் பிரபல அமெரிக்க சூப்பர்மார்கெட் நிறுவனத்துடன் கூட்டணி வைக்க ஆலோசித்து வருகிறது. இந்த கூட்டணியில், ப்ளிப்கார்ட்டின் 40% பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்க, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

ஆனால், ப்ளிப்கார்ட்டை வாங்க, தற்போது அமேசான் முயற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. வால்மார்ட்டும், அமேசானும் ப்ளிபிகார்ட்டின் 40% பங்குகளை வாங்க தற்போது கடும் போட்டியில் உள்ளார்களாம்.


 இந்த போட்டியால, பொருட்களோட விலை குறைஞ்சா சந்தோஷம் தான்...!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP