இன்போசிஸ் நிறுவன, 'குளோபல் ஹெட்' ராஜினாமா

பிரபல இன்போசிஸ் நிறுவனத்தின், குளோபல் ஹெட், சுதீப் சிங் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 | 

இன்போசிஸ் நிறுவன, 'குளோபல் ஹெட்' ராஜினாமா

 

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு, உலகின் பல நாடுகளிலும் இயங்கி வரும், பிரபல இன்போசிஸ் நிறுவனத்தின், குளோபல் ஹெட், சுதீப் சிங் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரபல தொழில் அதிபரும், ஐ.டி., ஜாம்பவானுமான நாராயண மூர்த்தி நிறுவிய, இன்போசிஸ் நிறுவனத்தின், சக்தி, சேவை மற்றும் பயன்பாட்டு துறைக்கான, சர்வதேச தலைவராக பணியாற்றி வந்த சுதீப் சிங், திடீரென தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எனினும், அவரது ராஜினாமாவுக்கான காரணம் குறித்து சுதீப்போ, இன்போசிஸ் நிறுவனமோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆறு மாதங்களில், இந்த நிறுவத்திலிருந்து, விலகிய மூன்றாவது உயர் அதிகாரி சுதீப் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP