தோல்வியை சந்தித்து வரும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்..!

ஸ்டார்ட் அப் என சொல்லபடும் தொடக்கநிலை கம்பெனிகள் உலகம் முழுக்க, வெற்றி, தோல்வி என்ற இரு நிலையையும் அடைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அது 90 சதவீதம் தோல்வி என்ற நிலையே ஏற்பட்டு வருவதாகக் கணக்கிடபட்டுள்ளது.
 | 

தோல்வியை சந்தித்து வரும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்..!

ஸ்டார்ட் அப் என சொல்லபடும் தொடக்கநிலை கம்பெனிகள் உலகம் முழுக்க, வெற்றி, தோல்வி  என்ற இரு நிலையையும் அடைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அது 90 சதவீதம் தோல்வி என்ற நிலையே ஏற்பட்டு வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

தோல்விக்கான முதற்காரணமாக சொல்லப்படுவது மேற்கத்திய தொழில் மாதிரிகள் எனப்படும் பிசினஸ் மாடல்களை இந்தியாவில் செயல்படுத்த முயல்வது. தொழில் முனைவோர் மேற்கத்திய தொழில் மாதிரியை அப்படியே எடுத்து அதை நம் நாட்டில் நடைமுறைப்படுத்த விழையும்போது, அது பெரும்பாலும் தோல்வியில் முடிவடைய வாய்ப்புகளே அதிகம். 

ஏனெனில் ஒவ்வொரு தேசத்திற்கும் என்று சமூக அமைப்பு, மக்களின் சிந்தனைத் தன்மை, வர்த்தகர்களின் மனோபாவம் போன்றவை நிச்சயம் வேறுபடும். அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டே ஒர் புதிய தொழிலைத் தொடங்கும் போது வர்த்தக நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் மேற்கத்திய வர்த்தக மாதிரியை நம் நாட்டில் அமல்படுத்தும்போது அது தோல்வியை சந்திக்க நேரிடுகிறது.

அடுத்து ஆரம்ப நிலையை சரிவர செய்தாலும் கம்பெனியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்குத் தேவையான கூடுதல் நிதி தேவையை வழங்க முதலீட்டாளர்கள் கிடைக்காமல் போவது. 

ப்ளிப்கார்ட், ஸ்விகி, பேடிஎம் போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வருமானம் மற்றும் செலவு கணக்குளில் லாப அளவு மிக குறைந்த புள்ளி இடைவெளியையே கொண்டிருக்கிறது. பல நிதி காலாண்டுகளில் நஷ்டத்தை எட்டியுள்ளன பெரும்பாலும் நாம் அறியாத செய்தியாகும். 

எனவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஏன் பெரும்பாலும் தோல்வியைச் சந்திக்கின்றன என்பதை அறிவதற்கு தேவையான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு , காரணிகளை அறிந்து புதிதாகத் தொடங்கும் நிறுவனங்கள் அவற்றை சரிசெய்துகொண்ட சந்தையில் இறங்கினால் மட்டுமே இனி தொடங்கப்படும் நிறுவனங்கள் வெற்றி பெற முடியும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP