இந்தியாவின் மீது பெரும் நம்பிக்கை உள்ளது: ஆப்பிள் தலைவர் டிம் குக்

இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு சிறிய வேகத்தடை தான் என்றும், இந்தியாவின் மீது தனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருப்பதாகவும், ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் தெரிவித்துள்ளார்.
 | 

இந்தியாவின் மீது பெரும் நம்பிக்கை உள்ளது: ஆப்பிள் தலைவர் டிம் குக்

இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு சிறிய வேகத்தடை தான் என்றும், இந்தியாவின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் தெரிவித்துள்ளார். 

ஆப்பிள் நிறுவனத்தின் 4வது காலாண்டு குறித்து பேசியபோது, "இந்தியா, துருக்கி, ரஷ்யா, பிரேசில் போன்ற வளரும் மார்க்கெட்டுக்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, நாணய மதிப்பு சமீபத்தில் குறைந்துள்ளது" என்றார் குக்.

மேலும், "குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் எங்களது 4வது காலாண்டு வியாபாரத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. அது நல்ல வளர்ச்சியாக இருக்க வேண்டுமென்பது தான் எங்களது குறிக்கோளும். ஆனால், இது வெறும் வேகத்தடை தான். நீண்ட கால திட்டத்தின் படி பார்த்தால்,  இங்கு வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் கூறினார். 

இந்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், வருங்காலத்தில், ஆப்பிள் கருவிகளை இந்தியாவிலேயே ஒருங்கிணைக்கும் தொழிற்சாலைகளை உருவாக்க அனுமதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மீதும் இந்திய மக்கள் மீதும் தனக்கு பெரும் நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது விஸ்டராண் என்ற நிறுவனத்துடன் சேர்ந்த, ஐபோன் 6s மொபைலை மட்டும் இந்தியாவில் வைத்து ஒருங்கிணைத்து வருகிறது ஆப்பிள். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP