உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த மே மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 | 

உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த மே மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்தியாவில் கடந்த மே மாதத்தில் உள்நாட்டு விமான சேவையை மொத்தம் 1.19 கோடி பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது  இது 17 சதவீத வளர்ச்சியாகும். அப்போது பயணிகள் எண்ணிக்கை 1.02 கோடியாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 26 சதவீதம் அதிகரித்து இருந்தது. 

மே மாதத்தில, அதிக அளவு இருக்கைகள் நிரம்பிய வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் விமானங்களில் இருக்கைகள் அதிகபட்சமாக 94.8 சதவீதம் நிரம்பி இருக்கிறது. அடுத்து இண்டிகோ விமானங்களில் 91 சதவீதம் நிரம்பி உள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் (15.1 லட்சம் பயணிகள்) 81.3 சதவீதம் நிரம்பி இருக்கிறது. 

குறித்த நேரத்தில் அதிக சேவைகளை வழங்கி இண்டிகோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.இந்நிறுவனம் 80.9 சதவீத சேவைகளை குறித்த காலத்தில் வழங்கி உள்ளது. பயணிகள் எண்ணிக்கை அடிப்படையிலும் இண்டிகோ நிறுவனமே முதலிடத்தில் உள்ளது. அதில் 48.5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP