மழை வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு வீடு... ஜியோஜித் வழங்கியது

கடந்த 2015ம் ஆண்ட தமிழகத்தில் ஏற்பட்ட மிகக் கடுமையான மழை வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீட்டை கட்டிக்கொடுத்துள்ளது ஜியோஜித்.
 | 

மழை வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு வீடு... ஜியோஜித் வழங்கியது

மழை வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு வீடு... ஜியோஜித் வழங்கியதுகடந்த 2015ம் ஆண்ட தமிழகத்தில் ஏற்பட்ட மிகக் கடுமையான மழை வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீட்டை கட்டிக்கொடுத்துள்ளது ஜியோஜித்.

ஜியோஜிட் நிதி சேவை லிமிடெடின் (ஜியோஜிட்) சி.எஸ்.ஆர் பிரிவான ஜியோஜிட் ஃபவுண்டேஷன் ஹேபிடட் ஃபார் ஹியூமானிட்டி இந்தியாவுடன் இணைந்து 2015ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட பெரு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களக்கு வீடு கட்டிக்கொடுத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குழந்தண்டலம் கிராமத்தில் இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை திருவனந்தபுரம் ஸ்மார்ட் சிட்டி தலைமை செயலாக்க அதிகாரியும், கேரளா தொழில் கட்டமைப்பு மேம்பாடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் எம்.பீனா ஐ.எ.எஸ், ஜியோஜிட் நிர்வாக இயக்குநர் சி.ஜெ.ஜார்ஜ், ஹேபிடட் ஃபார் ஹியூமானிட்டி இந்தியா நிர்வாக இயக்குநர் ராஜன் சாமுவேல் ஆகியோர் வழங்கினர்.

புதிய வீடுகள் கட்டிக்கொடுத்தது குறித்துச் சி.ஜெ.ஜார்ஜ் கூறுகையில், "மழையால் பாதிக்கப்பட்ட மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு உதவுவது என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். எங்களுடைய குறிக்கோளை ஹேபிடட்டுடன் இணைந்து நிறைவேற்றியுள்ளோம் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த வீடுகள் மழை வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உறுதியாக கட்டப்பட்டுள்ளது. கழிப்பறை வசதி, வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் சுகாதாரமான வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

விழாவில் புதிய வீட்டுக்கான சாவியைப் பெற்றுக்கொண்ட அமுதா கூறுகையில், "என்னுடைய கணவர் மறைவுக்குப் பிறகு என்னுடைய ஒரே மகன் அஜித்துடன் சிறிய கூரை வீட்டில் வசித்து வந்தேன். அந்த வீட்டை என்னால் அடிக்கடி சரிபார்க்கவும் முடியவில்லை. 2015ல் பெய்த பெருமழை நிலைமையை இன்னும் மோசமாக்கியது. நான் சம்பாதிக்கும் கூலி என்னுடைய குடும்பத்தை நடத்தவே போதுமானதாக இல்லை. இந்தநிலையில், புதிய வீடு என்பது கனவு நிஜமானது போல உள்ளது. ஏனெனில், என்னுடைய சொந்த உழைப்பால் வீடு கட்டும் அளவுக்கு என்னுடைய நிலை இல்லை. எப்போது புதிய வீட்டுக்குக் குடிபெயர்வோம் என்ற மகிழ்ச்சியான மனநிலையில் நான் இப்போது இருக்கிறேன்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP