ஜியோவின் ஹாலிடே ஹங்காமா ஆஃபர்! ரூ. 100 தள்ளுபடி!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஹாலிடே ஹங்காமா எனும் புதிய ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது.
 | 

ஜியோவின் ஹாலிடே ஹங்காமா ஆஃபர்! ரூ. 100 தள்ளுபடி!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஹாலிடே ஹங்காமா எனும் புதிய ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பிறகு, ரிலையன்ஸ் போன் முதல் ஏர்செல் வரை ஏராளமான தொலைத் தொடர்பு நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. மிகப்பெரிய நெட்வொர்க் உள்ள ஏர்டெல்லே ஆட்டம் கண்டுள்ளது. இந்தநிலையில், போட்டியை சமாளித்து சந்தையில் இருக்கும் ஒரு சில நிறுவனங்களையும் காலி செய்யும் வகையில், ஜியோ நிறுவனம் புதிய சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. தனது வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் நோக்கியில் ஹாலிடே ஹங்காமா என்ற பெயரில் புதிய ஆஃபரை அறிமுகப்படுத்தி ரூ. 100 தள்ளுபடியை வழங்குகிறது.

ஜியோவின் ரூ. 399 ரீசார்ஜ் செய்து 84 நாட்களுக்கு இலவச அழைப்பு, இலவச எஸ்.எம்.எஸ் மற்றும் தினமும் 1.5 ஜிபி சலுகைகளை பெற முடியும். இந்நிலையில் ஜியோவின் ஹாலிடே ஹங்காமா என்ற புதிய திட்டத்தின்படி ரூ. 399 செலுத்துவதற்கு பதில் ரூ. 299 செலுத்தி, மேற்கண்ட அதே சலுகைகளை பெறலாம் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோவின் ஹாலிடே ஹங்காமா ஆஃபர்! ரூ. 100 தள்ளுபடி!!

ஹாலிடே ஹங்காமா ஆஃபரை பெற மை ஜியோ ஆப் மூலம் ரீசார்ஜ் செய்து, மை ஜியோ அப்ளிகேஷனின் உள்ளே இருக்கும் போன் பே என்ற ஆப்ஷனில் பணத்தை செலுத்த வேண்டும். போன் பே என்ற ஆப்பில் ரூ. 349 ஐ செலுத்த வேண்டும். ஏற்கனவே மை ஜியோ அப்ளிகேஷனில் ரீசார்ஜ் செய்தால் 8 முறை 50 ரூபாய் வவுச்சர் கிடைக்கும். மை ஜியோ அப்ளிகேஷனில் ரூ.50யும், போன் பே வாலெட்டில் ரூ.50 கேஷ்பேக்கும் சேர்த்து ரூ.100 சலுகையை பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.399க்கு ரீசார்ஜ் செய்வதன் பலனை ரூ. 299 இல் பெறலாம். ஜியோவின் இந்த ஹாலிடே ஹங்காமா ஆஃபர் ஜூன் 1-தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை செல்லுபடியாகும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நிறுவனங்களின் போட்டியால் தற்காலிகமாக சந்தோஷப்படுவது வாடிக்கையாளர்கள்தான் என்றாலும், எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என்ற கவலையும் உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP