ஏர்செல் சொத்துக்கு அடித்துக்கொள்ளும் ஜியோ - ஏர்டெல்

ஏர்செல்லின் சொத்துக்கள் ஏலம் விடப்பட உள்ளது. அதன் சொத்துக்களை வாங்க பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, ஸ்டெர்லைட் டெக்னாலஜி மற்றும் இரு முதலீடு நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
 | 

ஏர்செல் சொத்துக்கு அடித்துக்கொள்ளும் ஜியோ - ஏர்டெல்

ஏர்செல்லின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. அதன் சொத்துக்களை வாங்க பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, ஸ்டெர்லைட் டெக்னாலஜி மற்றும் இரு முதலீடு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. 

ஜியோ வருகைக்குப் பிறகு சிறிய தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நம்பர் 1 இடத்தில் இருந்த ஏர்செல் நிறுவனமும் இதில் மூடப்பட்டது. தற்போது ஏர்செல் நிறுவனத்தின் சொத்துக்களை விற்று, முதலீட்டை எடுக்க முதலீட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஏர்செல் செல்லுலார் லிமிடெட் மற்றும் டிஷ்நெட் ஓயர்லெஸ் லிமிடெட் இரண்டும் இணைந்த நிறுவனம் தான் ஏர்செல். அந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ. 50,000 கோடி கடன் உள்ளது. இந்த விற்பனையின் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாயாக கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்பெக்ட்ரம் ஏல உரிமையும் உள்ளது. இது பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 2016ம் ஆண்டில், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோ காம் லிமிடெட் நிறுவனம், பல இலவச சேவைகளோடு ஜியோ சிம்மை வெளியிட்டதால், பல டெலிகாம் நிறுவனங்கள், கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகின. அதில் கடுமையாக பாதிக்கப்பட்டது ஏர்செல் நிறுவனம். 

ஜியோவோடு ஏர்செல் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்ட  ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்களால், இரண்டு நிறுவனமும் இணைக்கப்படவில்லை. கடுமையான நஷ்டத்திற்கும், கடனுக்கும் ஆளானதால் ஏர்செல் நிறுவனம், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், கடனை தீர்க்க முடியவில்லை என ஒப்புக்கொண்டது. அதன் சேவைகள் நிறுத்தப்பட்டன. வாடிக்கையாளர்கள் வேறு சேவை நிறுவனத்துக்கு மாற கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

தற்போது 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் விற்பனைக்கு வருகிறது. இதில், டவர் உள்ளிட்டவை அடங்கும். இவற்றை கைப்பற்ற மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ கடும் போட்டி போடுகின்றன. இதுதவிர மற்ற சில நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன. தற்போது ஏலத்தில் விட உள்ள சொத்துக்கள் மூலம் வரும் பணத்தினைக் கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகிய நிறுவனங்களின் கடனை அடைக்க இயலும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP