ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய தளம் அறிமுகம்

ஈபே இந்தியா தளத்தை மூடப்போவதாக அதன் தலைமைச் செயல் அலுவலர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி அறிவித்தபோது, ஒரு தளத்தை அறிமுகம் செய்யப்போவதாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்தது. அதன்படி புதன்கிழமை முதல் 2குட் தளம் செயல்படத் தொடங்கியுள்ளது.
 | 

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய தளம் அறிமுகம்

கடந்த மாத இறுதியில் இபே இந்தியா தளத்தை மூடப்போவதாக அதன் தலைமைச் செயல் அலுவலர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இபே போன்ற புதிய இணைய தளத்தை அறிமுகம் செய்யப்போவதாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்தது. அதன் அடிப்படையில் கடந்த புதன்கிழமை  முதல் 2குட் என்ற புதிய சைட்டை  செயல்படத் தொடங்கியுள்ளது.

பழைய மற்றும் பயன்படுத்தாமலேயே திருப்பி அளிக்கப்பட்ட பொருட்களைப் புதுப்பித்து விற்பனை செய்யும் இவ்வணிகத்தில் முதன்முறையாக ஃப்ளிப்கார்ட் இறங்குகிறது. இன்னும் ஐந்து-ஆறு ஆண்டுகளில் இதன் சந்தை ரூ. 1,39,740 கோடி மதிப்புக்கு விரிவடையும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்குப் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், மின்னணு சாதனங்கள் போன்றவை மட்டுமே 2குட் தளத்தில் விற்கப்படும். படிப்படியாக வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றையும் இத்தளம் விற்கத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"2குட் தளத்தில் விற்கப்படும் எல்லா பொருட்களும் முழுமையாக சோதித்த பின்பு, உரிய சான்றுகளுடனும் உத்தரவாதத்துடனும்தான் விற்கப்படும். பழைய பொருட்களை விற்கும் துறையில் தரத்தின் மீதான நம்பிக்கை சார்ந்த பிரச்னைகள் தற்போது உள்ளன. இத்தளம் அதனை மாற்றி அமைக்கும். இத்தளத்தின் வாயிலாக வாங்கப்படும் பொருட்களுக்கு மூன்று மாதங்கள் முதல் ஓராண்டு வரை உத்தரவாதம் வழங்கப்படும். மேலும் நாடெங்கும் உள்ள சேவை மையங்களிலும் சர்வீஸ் செய்துதரப்படும்" என்று ஃப்ளிப்கார்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP