ஃப்ளிப்கார்ட் - வால்மார்ட் இணைந்தால் இந்தியாவுக்கு நல்லது - அமேசான்

பிரபல இணைய வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட், அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் வால்மார்ட் நிறுவனத்துடன் கூட்டு சேர முயற்சி செய்து வரும் நிலையில், இந்த கூட்டணி இந்திய இணைய வர்த்தகத்துக்கு மிக நல்லது என இந்தியாவின் அமேசான் தலைவர் அமித் அகர்வால் கூறியுள்ளார்.
 | 

இந்தியாவின் இணைய வர்த்தகத்தில் முக்கிய பங்குவகிக்கும் இரு நிறுவனங்கள் ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான். அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பன்சால் சகோதரர்கள், இந்தியாவில் ஃப்ளிப்கார்ட்டை முதலில் தொடங்கினர். அதன்பின் அமேசான் இந்தியாவில் கால் பதித்ததில் இருந்து, இரு நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

பல சேவைகளை வழங்கி வரும் அமேசான், மார்க்கெட் பங்கில் ஃப்ளிப்கார்ட்டை தொடர்ந்து பின்தங்கி வருகிறது. இரு நிறுவனங்களுக்கும் இடையே சர்ச்சைகளும் எழாமல் இருந்ததில்லை. ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 'பிக் பில்லியன் டேஸ்' என்ற பெயரில் ஆஃபர்களை அறிவிக்கும் அதேநேரம், அமேசான் நிறுவனமும் பல ஆஃபர்களை அறிவிக்கும். இதனால், கடுப்பான ஃப்ளிப்கார்ட்டின் மூத்த அதிகாரிகள் அமேசான் தங்களை காப்பியடிப்பதாக நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளனர். 

சமீப காலமாக இந்தியாவில் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து வருகிறது அமேசான். உணவுப்பொருட்கள், காய்கறி டெலிவரி என பல திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்துகிறது அந்நிறுவனம். அதனுடன் போட்டிபோட புதிய முதலீடுகள் தேவைப்படும் நிலையில், ஃப்ளிப்கார்ட், வால்மார்ட்டுடன் கைகோர்க்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. விரைவில் இந்த கூட்டணி, அமேசானுக்கு கடும் போட்டி கொடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சமீபத்தில் பேட்டியளித்த அமேசான் தலைவர் அகர்வாலிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இந்த ஒப்பந்தம், இந்திய இணைய வர்த்தகத்துக்கு நல்லது தான். அமேசானும் இந்தியாவில் அதிகம் கவனம் செலுத்துவோம். மற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்துவது கிடையாது. எங்களுக்கான நேரமும் மாறி மாறி வரும். நிறைய முதலீடுகள் வருவது எல்லோருக்கும் நல்லது தான்" என்றார். 

வால்மார்ட்டுக்கு முன், அமேசான் ஃப்ளிப்கார்ட்டை வாங்க முயற்சித்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP