இ - காமர்ஸ் அறிவிப்பு: ரிலையன்ஸ் பங்கு விலை விர்...

இந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்துடன் காணப்படும் நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனமான, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலை உயர்ந்துள்ளது.
 | 

இ - காமர்ஸ் அறிவிப்பு: ரிலையன்ஸ் பங்கு விலை விர்...

இந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்துடன் காணப்படும் நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனமான, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலை உயர்ந்துள்ளது. 

அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக, இ - காமர்ஸ் துறையில், ரிலையன்ஸ் நிறுவனம் கால் பதிக்க உள்ளதாக அந்த நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

அவரின் அறிவிப்பை தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, ரிலையன்ஸ் நிறுவன பங்கு விலையில் திடீர் ஏற்றம் காணப்படுகிறது. 

தற்போதைய நிலவரப்படி, ஒரு பங்கின் விலை, 40 ரூபாய் வரை உயர்ந்து, 1,225க்கு விற்பனையாகிறது. இதன் விலை, விரைவில், 1,450 ரூபாயை எட்டும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். 

இது, முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. அதே போல், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளும் திருப்தியளிக்கும் வகையில் உள்ளதால், ரிலையன்ஸ் நிறுவன பங்கின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP