இ-பே இந்தியாவை நிரந்தரமாக மூடுகிறது ஃபிலிப்கார்ட்!

இ-பே இந்தியா என்ற ஆன்லைன் சந்தை ஃபிலிப்கார்ட் நிறுவனத்தால் 14 ஆகஸ்ட் அன்று மூடப்படும் என்று தகவல் வெளியானது
 | 

இ-பே இந்தியாவை நிரந்தரமாக மூடுகிறது  ஃபிலிப்கார்ட்!

இ-காமர்ஸ் சந்தையில் அநேக பங்கு வகிக்கும் நிறுவனம் ஃபிலிப்கார்ட். இ-பே இந்தியா என்ற ஆன்லைன் சந்தை ஃபிலிப்கார்ட் நிறுவனத்தால் 14 ஆகஸ்ட் அன்று மூடப்படும் என்று தகவல் வெளியானது. மைக்ரோசாப்ட், டென்சென்ட், இ-பே போன்ற உலக தொழிநுட்பங்கள் மூலம் கடந்த ஆண்டு 1.4 பில்லியன் டாலர்களை பெற்றது ஃபிலிப்கார்ட் நிறுவனம். பின்னர் 500 மில்லியன் டாலர்களுக்கு இ-பே ஃபிலிப்கார்ட் நிறுவனத்திற்கு விற்க்கபட்டது.


"எங்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஒரு புதிய ஆன்லைன் சந்தையை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப உருவாக்கியுள்ளோம். இந்த புது தொழில்நுட்பம் மிக பெரியதாக இருக்கும் எனவும் சுலபமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்ய உதவும். இந்த புது சந்தையை வெளியிடுவதினால் முதல் படியாக இ-பே சேவை ஆகஸ்ட் 14ல் இருந்து மூடப்படும். இ-காமர்ஸ் பரிமாற்றங்கள் எல்லாமே அந்த புது ஆன்லைன் சந்தை மூலம் வாடிக்கையாளர்கள் செய்துகொள்ளலாம்" என்று ஃபிலிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளரின் நம்பிக்கையும் வசதிக்கேற்ப இந்த புது ஆன்லைன் சந்தை அமையும் என்று ஃபிலிப்கார்ட் நிறுவனம் தெரிவித்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP