தமிழகத்தில் பெரிதாக கால் பதிக்கும் 'டிஷ் டிவி'

நாடு முழுவதும் செட் டாப் பாக்ஸ் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், டிஷ் டிவி, தமிழகத்தில் பெரிய அளவில் கால் பதிக்க முயற்சி செய்து வருகிறது.
 | 

தமிழகத்தில் பெரிதாக கால் பதிக்கும் 'டிஷ் டிவி'

நாடு முழுவதும் செட் டாப் பாக்ஸ் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், டிஷ் டிவி, தமிழகத்தில் பெரிய அளவில் கால் பதிக்க முயற்சி செய்து வருகிறது. 

முதல்முதலாக இந்தியாவில் செட் டாப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சி சேவையை வழங்கத் துவங்கிய டிஷ் டிவி நிறுவனம், தற்போது தமிழக மார்க்கெட்டை குறிவைத்துள்ளது. ஏர்டெல், டாட்டா ஸ்கை, சன் டைரக்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்தியில் சுமார் 10.5 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது டிஷ் டிவி. இதை இந்த ஆண்டின் இறுதிக்குள் இரண்டு மடங்காக்க திட்டமிட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடியோகானின் டி2எச் நிறுவனமும் டிஷ் டிவியும் சமீபத்தில் ஒன்றிணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், டிஷ் டிவி-யின் தலைவர் (விற்பனை) சுக்ப்ரீத் சிங் மற்றும் மூத்த விற்பனை அதிகாரி சித்தார்த் கப்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக வாடிக்கையாளர்களை கவர்வதற்காக முதல்முறையாக 65 தமிழ் சேனல்களை டிஷ் டிவியில் பார்க்கலாம், என சிங் கூறினார். வேறு எந்த நிறுவனத்திலும் இதனை தமிழ் சேனல்கள் கிடையாது என குறிப்பிட்டார்.

தங்களுக்கு தேவையான ஒரே மொழி போதும் எனும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.140+வரி என்ற மதிப்பில், அந்த மொழியின் அனைத்து சேனல்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளுக்கு ரூ.177+வரி முதல் பல வித்தியாசமான பேக்குகள் உள்ளன. இதுமட்டுமல்லமல், ரூ.8.5ல் எந்த ஒரு சேனலை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம். பல்வேறு எச்டி பேக்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாளை முதல் இந்த புதிய பேக்குகள் அனைத்தும் நடைமுறைக்கு வருகின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP